முனைவர்சொற்கோ கருணாநிதி நந்தனம் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் எழுதிய கொரோனா”கவிதை

முனைவர்சொற்கோ கருணாநிதி நந்தனம் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் எழுதிய கொரோனா”கவிதை

அழகி -படத்தில் பாடலாசிரியராக அறிமுகமானவர்.

இசைஞானி இளையராஜா – (குமுதம் ) சுஜாதா இணைந்து நடத்திய திரைப்பட பாடலாசிரியர் போட்டியில் முதல் பரிசு தங்கப் பேனாபெற்றவர்.

மாநில அளவிலான கவிதைப் போட்டிகளில் 33 முறை முதல் பரிசு பெற்றவர்.

உவமைக்கவிஞர் சுரதா
இயக்குனர் பாலசந்தர்
இசைஞானிஇளையராஜா

புலவர் புலமைப்பித்தன்
கவிக்கோஅப்துல் ரகுமான் கவிஞர்வாலி
கவிப் பேரரசு வைரமுத்து கவிஞர் முத்துலிங்கம்
கவிஞர் மேத்தா
ஆகியோரிடம்- பாராட்டு அணிந்துரை பெற்றவர்.

பத்து நூல்கள் எழுதியவர்.

. உலகஇசுலாம் மாநாடு – கோவை செம்மொழி மாநாடுகளில் கவி பாடியவர்.
.
2000-இல் அழகப்பா பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர்.

2010-ல் தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர்.

மொட்ட சிவா கெட்ட சிவா – படத்தில் ஹர ஹர மகாதேவகி – எனும் பாடல் எழுதிய மைக்காக V4 விருது பெற்றவர்.

தொலைக்காட்சிகள் பலவற்றில் கவியரங்கத் தலைமை ஏற்றவர்.

விசித்திர அசுரா———-

விஷ பாட்டில் கடைகளை மூடவைத்தாய்

வீடுபேறு அனைவரையும் தேட வைத்தாய்

விபத்தில்லாச் சாலைகளைத் தொடங்க வைத்தாய்

விண்முட்ட நின்றவனை அடங்க வைத்தாய்

விமானத்தில் வேதனையாய் நீ குதித்தாய்

வித்தியாச விதிகளினை நீ விதித்தாய்

ஆட்டி வைத்த – கூட்டத்தைப் போய் மிதித்தாய்

அப்பாவி மக்களைப் போய் ஏன் சிதைத்தாய்

சுத்தமே அத்தனை முக்கியம் என்பதைச் சப்தமின்றி உரைத்தாய்

.சூரனே வீரனே என்கிற பெயர்களைத் தாறுமாறாய்க் கிழித்தாய்

நிரம்பியே வழிந்திடும் நெரிசலே இல்லாத நிம்மதியைப் படைத்தாய்

கரும்புகைக் கக்கிய காற்றினை நீக்கிய காட்சியினை வடித்தாய்

கோயில் மசூதியில் ஆலய -கடவுளர்க்குக் கொஞ்சம் நாள் ஓய்வு கொடுத்தாய்

கும்பிடும் கடவுளை மருத்துவர் காவலர் ஏவலரில் குழுவிலே நீ படைத்தாய்

சிவனா மெதினா சிசுபாலலா வடிவினை வீட்டினிலே நீ வடித்தாய்

கொரனா என்கிற எமனா அசுரனே நீ வெளி யிடத்தைப் பிடித்தாய்

-சொற்கோ கருணாநிதி
(பேராசிரியர் – பாடலாசிரியர் )