கொரோனா வைரஸ் நோய் தொற்றில் இருந்து பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சனுக்கும், அவரது மகன் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன், மருமகள் நடிகை ஐஸ்வர்யா ஆகியோருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அவர்கள் மும்பை உள்ள நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்கள்.

இந்திய அளவில் பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து அசத்திய பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதை அறிந்த பலரும் அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப அவருடைய ரசிகர்கள் அவருடைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வந்தனர்.

இந்த நிலையில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் கொரோனா வைரஸ் நோய் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அவரது மகன் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!