கொரோனா பரவலைத் தடுக்க நடிகை ரோஜா செய்த செயல் ! இணையத்தில் வைரலாகும் புகைப்படம் !
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக நடிகை ரோஜா தனது குடும்பத்துடன் வீட்டிலேயே யாகம் ஒன்றை நடத்தி வருகிறார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் 21 முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.கொரொனா வைரஸ் பரவில் உலகப் பொருளாதாரத்தையே காலி செய்துள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.
இந்நிலையில் நடிகையும் அரசியல்வாதியுமான நடிகை ரோஜா தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் ருத்ராபிஷாகம் ஒன்றை செய்துள்ளார். இந்த யாகத்தின் மூலம் கொரோனாவின் பிடியில் இருந்து கடவுள் பொதுமக்களை காத்திட வேண்டும் என அவர் வேண்டிக்கொண்டுள்ளார்.
இது சம்மந்தமானப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.