கோமாளி படத்தின் டிரெய்லரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை கலாய்த்து மாற்றிக் கொண்ட – ஜெயம் ரவி

ஜெயம் ரவி, காஜல் அகர்வால் முதன்முறையாக ஜோடியாக நடித்துள்ள படம் கோமாளி. சம்யுக்தா, யோகிபாபு, சாரா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தை பிரதீப் ரங்கநாதன் என்ற 23வயது வாலியர் இயக்க ஹிப்ஹாப் தமிழன் ஆதி இசையமைத்துள்ளார்.

வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இப்படம் இம்மாதம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் இப்படத்தின் டிரைலர் இன்று ஆகஸ்ட் 3ஆம் தேதி மாலை 7 மணிக்கு வெளியானது.

இந்த கோமாளித்தனமாக டிரைலருக்கு ரசிகர்களிடம் மிக நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.

இந்த டிரைலரில் கடைசி நொடியில் கோமாவில் இருந்து மீண்ட ஜெயம் ரவி, யோகிபாபுவிடம் இது எந்த வருடம்- என கேட்கிறார். அதற்கு 2016 என்று சொல்கிறார் யோகிபாபு.

ஜெயம் ரவி அவரின் பதிலை மறுக்கவே, யோகிபாபு அதை பதிவு செய்ய ரஜினிகாந்த் அரசியல் வருகை பற்றிய பேசிய அறிவிப்பு வீடியோவை காட்டுகிறார்.

அதில் கடந்த 2017ஆம் ஆண்டில் டிசம்பர் 31ஆம் தேதி நான் அரசியலுக்கு வருவது உறுதி என ரஜினிகாந்த் பேசுவதாக உள்ளது. இது ரசிகர்கள் சந்திப்பில் ரஜினிகாந்த் பேசியிருந்தார்.

அதாவது காட்சிப்படி 2016 என்று சொல்லும்போது ரஜினிகாந்த் பேசிய 2017ஆண்டு இறுதி நாள் வீடியோ எப்படி 2016ல் வர முடியும்? இது கூட தெரியாமல் அவர்கள் இப்படி ஒரு காட்சியை வைத்துள்ளார் படத்தின் இயக்குனர்.

இதனை கண்ட ரஜினிகாந்தின் ரசிகர்கள் தற்போது கோமாளியை கலாய்த்து வருகின்றனர்.

மேலும் 1996ல் அரசியலுக்கு வருவதாக எந்த ஒரு வாக்குறுதியும் ரஜினிகாந்த் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கோமாளி பட டிரைலரில் இப்படி என்றால் முழுநீள படத்தில் எப்படியோ தெரியவில்லை

அந்த டிரைலர் இதோ…