சிம்பு இயக்குனராக அவதாரமெடுக்கும் – மகா மாநாடு
வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு தனது அடுத்த படத்தை கடந்த ஆண்டு அறிவித்திருந்தார். இப்படத்தில் சிம்பு கதாநாயகனாகவும், கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாகவும் நடிக்கவிருந்தார்.
அரசியல் த்ரில்லர் என்று அழைக்கப்படும் இந்த படம் சுவாரஸ்யமான கதையை முன்னணியில் இருப்பதால் அதன் மீது பெரும் எதிர்பார்ப்புகளைக் வைத்திருந்தனர் ரசிகர்கள். இருப்பினும், சமீபத்தில் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் மாநாடு படம் கைவிடப்பட்டது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.
இதனை அடுத்து சிம்புவின் ரசிகர்கள் அனைவரும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர் . தற்போது ரசிகர்களுக்கு மகிச்சியளிக்கும் விதமாக புது படத்தில் சிம்பு கதாநாயகனாகவும் நடிக்க இருப்பதாகவும் , இப்படத்தை சிம்புவே இயக்குவதாகவும் அதிகாரபூர்வமான தகவல்கள் வெளியாகியுள்ளது . மேலும் இப்படத்தை T ராஜேந்தர் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான சிம்பு சினி ஆர்ட்ஸ் சார்பில் 125 கோடியில் தயாரிக்கிறார் . இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும்