சிம்பு நடிக்கும் மாநாடு படத்தில் திருப்புமுனை வேடத்தில் கல்யாணி பிரியதர்ஷன்!

தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்து விட்டு தமிழுக்கு வந்துள்ள கல்யாணி பிரியதர்ஷன், சிவகார்த்திகேயனுடன் ஹீரோ, சிம்புவுடன் மாநாடு, துல்கர் சல்மானுடன் வான் ஆகிய படங்களில் நடிக்கிறார்.

இதில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்புவுடன் அவர் நடிக்கும் மாநாடு படத்தில், கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த திருப்புமுனை கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறியுள்ள கல்யாணி பிரியதர்ஷன், அரசியல் கதையில் உருவாகும் இந்த படத்தில் முதன் முறையாக எமோசனலான ஒரு வேடத்தில் நடிக்கிறேன். இந்த வேடம்தான் கதைக்கு டுவிஸ்ட்டாக அமையும் என்று தெரிவித்துள்ளார்