நடிகர் சிலம்பரசன் டிஆர் நடிக்கும் மாநாடு திரைப்படத்தின் முக்கியமான அப்டேட்டை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார் யுவன் சங்கர் ராஜா.
சென்னை 03 ஜூன் 2021
நடிகர் சிலம்பரசன் டிஆர் நடிக்கும் மாநாடு திரைப்படத்தின் முக்கியமான அப்டேட்டை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார் யுவன் சங்கர் ராஜா.
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி உள்ள ‘மாநாடு’ திரைப்படத்தில் சிலம்பரசன் டிஆர்க்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார்.
நடிகர் சிலம்பரசன் டிஆர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாநாடு.
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அதிக பொருட்செலவில் மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.
இந்த திரைப்படத்தில் சிலம்பரசன் டிஆர் அப்துல் காலிக் என்ற முஸ்லிம் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
நடிகர் சிலம்பரசன் டிஆருக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷனும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
மாநாடு திரைப்படத்தின் முதல் பாடல் ரம்ஜான் பண்டிகையன்று வெளியிடப்படும் என அறிவித்திருந்த படக்குழுவினர் அந்த சமயத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு தாயார் மரணமடைந்ததால், அப்பாடல் வெளியீடை தள்ளிவைத்தனர்.
இந்த நிலையில், தள்ளிவைக்கப்பட்ட மாநாடு திரைப்படத்தின் பாடல் வெளியீடு குறித்த அப்டேட்டை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிட்டுள்ளார்.
மிக விரைவில் அந்த பாடல் வெளியிடப்படும் என அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதன் மூலம் மாநாடு திரைப்படத்தின் முதல் பாடல் ஓரிரு வாரத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hey tweeps #maanaadu single is coming very soon!! #staysafe #spreadlove #lovemusic @silambarasanTR_ @vp_offl @sureshkamatchi @U1Records
— Raja yuvan (@thisisysr) June 3, 2021











