சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டாருடன். இணைகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.!*
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் திரைப்பட இசை வெளியீட்டு விழா ஓரிரு தினங்களுக்கு முன் நடைபெற்றது. இந்த படம் 2020 பொங்கல் சமயத்தில் வெளியாகவுள்ளது.
இதனையடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். நடிக்கவுள்ளார்
இதற்கு தற்காலிகமாக தலைவர் 168 எனத் தலைப்பு வைத்துள்ளனர்.
இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க, இமான் இசையமைக்கிறார். முக்கிய வேடத்தில் சூரி நடிக்கிறார்.
இந்த நிலையில் தற்போது கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதை படக்குழு அறிவித்துள்ளனர்.
கீர்த்தி சுரேஷின் அம்மா நடிகை மேனகா அவர்கள் ரஜினிகாந்த்க்கு ஜோடியாக நெற்றிக்கண் படத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.











