சுதந்திர தினத்தில் நடிகர் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் வெளியீடு.?
நடிகர் சூர்யா தயாரித்து அவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சூரரைப் போற்று’.
இயக்குனர் சுதா கொங்கரா இயக்கியுள்ள இதில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்க தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
அசுரன் திரைப்படத்தை தொடர்ந்து இந்த திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.
இப்படத்தை ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவால் இதன் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஜீன் அல்லது ஜீலைக்குள் கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு கட்டுக்குள் வந்துவிடும் என்றும் அதற்குள் திரையரங்குகள் திறக்கப்பட்டு நிலைமை சீராகும் என்ற நம்பிக்கையிலும் சூரரைப்போற்று திரைப்படத்தை ஆகஸ்ட் 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.