சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கட்சி மூன்றாவது இடத்தையே பிடிக்கும் – விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கருத்து!*

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வரும் 2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கு முன்னர் அரசியல் கட்சியை குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தை பொருத்தவரை அதிமுக திமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்கு இடையே மட்டுமே போட்டி இருக்கும் என்றும் வரும் 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் இந்த இரு கட்சிகளின் கூட்டணிகளுக்கு இடையே மட்டுமே போட்டி இருக்கும் என்றும், ரஜினி கட்சி ஆரம்பித்தாலும் அந்த கட்சியை மூன்றாவது அணி என்று கூறுவார்களே தவிர அந்த அணி இரண்டாவது இடத்தைப் பிடிப்பதற்கான வாய்ப்பு இல்லை என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!