புது வருடம் பிறந்தவுடன் ஜனவரி மாதத்தில் அரசியல் கட்சித் துவக்கம் டிசம்பர் 31 ஆம் தேதி கட்சி பற்றி அறிவிப்பு – சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் அதிகாரபூர்வ அறிவிப்பு.
சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
டிசம்பர் 2017-இல் அரசியலுக்கு வருவது உறுதி என கூறியிருந்தேன்.
கொடுத்த வாக்கில் இருந்து நான் என்றைக்கும் மாற மாட்டேன்.
கொரோனா காரணமாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய முடியவில்லை.
எனக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் சுற்றுப்பயணம் செய்வது ஆபத்து என மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
என் உயிரே போனாலும் மக்களே முக்கியம் என களம் இறங்கி உள்ளேன்.
என் ரசிகர்களுக்காக
தமிழக மக்களுக்காக என் உயிரே போனாலும் கவலையில்லை.
“மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம். இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல” என கூறியிருந்தார்.
அப்போது “தமிழக மக்கள் நலனுக்காக என் உயிரே போனாலும் பரவாயில்லை.
நான் வென்றால் அது மக்களின் வெற்றி நான் தோற்றால் அது மக்களின் தோல்வி“ என்றார்.
தேர்தலில் தோல்வி அடைந்தாலும் அது மக்களின் தோல்வியாகவே இருக்கும்.
தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது.
எல்லாருக்கும் ஒரு தலையெழுத்து இருக்கு தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றுவோம்.
ஜாதி , மதச்சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம்.அற்புதம் அதிசயம் நிகழும்.
அண்ணாத்த திரைப்படத்தை முடித்து தர வேண்டியது என் கடமை.
இதனையடுத்து தமிழக அரசியல் களம் பரபரப்பானது.
ஜனவரியில் கட்சி துவங்க இருப்பதால் ரஜினி மக்கள் மன்றத்திற்கு டாக்டர் ரா. அர்ஜுனமூர்த்தி அவர்கள் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் மற்றும் திரு. தமிழருவி மணியன் அவர்கள் மேற்பார்வையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த அறிவிப்பை ரஜினிகாந்த் சற்றுமுன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
இந்த அர்ஜுனமூர்த்தி யார் என்பது தெரியுமா..?
அர்ஜூன மூர்த்தி திராவிட முன்னேற்றக் கழகம் தலைவர் மு.க ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் குடும்பத்திற்கு நெருக்கமான உறவினர் ஆவார்.
ஆரம்ப காலத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் எம்.பி தயாநிதிமாறன் அவர்களுடன் பணியாற்றி வந்தார்.
அதன் பிறகு பாரதி ஜனதா கட்சியில் அறிவுச்சார்பு தலைவராக இருந்தார்.
தற்போது நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இதனைத்தால் அர்ஜூன மூர்த்தியை பாரதி ஜனதா கட்சியில் அறிவுச்சார்பு தலைவராக பதவியில் இருந்து நீக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று ரஜினிகாந்த் அவர்களிடம் உதவி பெற அவருடைய வீட்டருகே காத்திருந்த மாற்றுத்திறனாளி பெண் ஒருவர்.
தகவலை கேள்விப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது அலுவலக ஆள் மூலம் அந்த பெண்ணுக்கான உதவி தொகையை கொடுத்து மேற்கொண்டு ஏதாவது உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளுங்கள் என தெரிவித்து உள்ளார்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஜனவரியில் கட்சி துவங்க இருப்பதால், டாக்டர் ரா.அர்ஜுனமூர்த்தி அவர்கள் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் மற்றும் திரு. தமிழருவி மணியன் அவர்கள் மேற்பார்வையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
— Rajinikanth (@rajinikanth) December 3, 2020
ஜனவரியில் கட்சித் துவக்கம்,
டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு. #மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம்#இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல 🤘🏻 pic.twitter.com/9tqdnIJEml— Rajinikanth (@rajinikanth) December 3, 2020