சூரரைப் போற்று’ திரைப்படத்தில் பாடல் பாடியுள்ளார் நடிகர் சூர்யா*

காப்பான் படத்தை அடுத்து சூர்யா நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் படம் சூரரைப் போற்று. இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் திரைப்படத்தில் அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், சிக்யா நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. இந்நிலையில் மாறா தீம் மியூசிக்குக்கான ரேப் பாடலை நடிகர் சூர்யா தனது சொந்தக் குரலில் பாடியிருப்பதாகவும், அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றையும் ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

https://twitter.com/gvprakash/status/1196378546588938241?s=19

 

CLOSE
CLOSE
error: Content is protected !!