உலகின் சிறந்த ஆயிரம் திரைப்படங்களின் பட்டியல் வெளியீடு – டாப் 3-ல் இடம்பெற்ற நடிகர் சூர்யா நடித்த ‘சூரரைப் போற்று’ திரைப்படம்.

சென்னை 18 மே 2021

உலகின் சிறந்த ஆயிரம் திரைப்படங்களின் பட்டியல் வெளியீடு – டாப் 3-ல் இடம்பெற்ற நடிகர் சூர்யா நடித்த ‘சூரரைப் போற்று’ திரைப்படம்.

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகி மிக் பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் ‘சூரரைப்போற்று’.

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கி இருந்த இப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது.

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகிய இந்த திரைப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்திருந்தது.

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இந்த சூரரைப்போற்று
திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

இந்த நிலையில் பிரபல திரைப்பட ரேட்டிங் மற்றும் தகவல் தளமான ஐஎம்டிபி உலகளவில் அதிக ரேட்டிங் பெற்ற டாப் 1000 திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

ஷஷாங் ரிடம்ப்ஷன் திரைப்படம் 9.3 புள்ளிகளுடன் முதலிடத்தையும் பிடித்துள்ளது.

காட்பாதர் திரைப்படம் 9.2 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது.

இந்த சூரரைப்போற்று
திரைப்படத்திற்கு 9.1 ரேட்டிங் புள்ளிகளுடன் மூன்றாம் இடம் கிடைத்துள்ளது.

இதில் சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் 3-வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.