நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் சூரரைப் போற்று’ திரைப்படம் OTTயில் ரிலீஸ் செய்வதால் சூர்யாவுக்கு நஷ்டம் தான் தயாரிப்பாளர் தனஞ்செயன்.

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ள திரைப்படம் ‘சூரரை போற்று’

ஜிவி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தில் அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு, பரேஷ் ராவல் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன் திரைப்படத்தின் பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி ஹிட்டடித்துள்ளது.

கடந்த மே மாதம் திரைப்படம் வெளியாகவிருந்த நிலையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது அதானல் திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில் திரைப்படம் ரிலீஸ் தள்ளி போனது.

ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து 150 நாட்களாக திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில் திரைப்படத்தை ஆன்லைனில் வெளியிடுவதாக அறிவித்தார் நடிகர் சூர்யா.

ஏற்கெனவே இவரின் மனைவி நடிகை ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படத்தை ஆன்லைனில் ரிலீஸ் செய்த போதே திரையரங்கு உரிமையாளர் எதிர்ப்பை வாங்கி கட்டிக் கொண்டார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

சூரரைப்போற்று அக்டோபர் 30 ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோவில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உலகளவில் திரையிடப்பட உள்ளது.

இந்த நிலையில் நடிகர் சூர்யாவின் இந்த அதிரடி முடிவு குறித்து பிரபல சேனலுக்கு தயாரிப்பாளர் தனஞ்செயன் கொடுத்துள்ள பேட்டியில்….

‘சூரரைப் போற்று’ திரைப்படம் பிரம்மாண்டமான திரைப்படம்.

அது ஓடிடி.க்கான திரைப்படமே இல்லை. திரையரங்குகளில் வெளியிட வேண்டும்.

ஆனால் திரையரங்குகள் திறப்பது எப்போது என யாருக்கும் தெருயவில்லை. துபாய், மலேசியா நாடுகளில் திரையரங்குகள் திறக்கப்பட்டும் 5% ஆடியன்ஸ் மட்டுமே வருகின்றனர்.

இதனால் எவருக்கும் லாபமில்லை.

கொரோனா தடுப்பூசி வரும்வரை மக்களிடம் பீதி இருக்கத்தான் செய்யும்.

நிச்சயமாக நடிகர் சூர்யாவின் முடிவு அவருக்கு நஷ்டம் தான் தியேட்டரில் ரிலீஸ் செய்தால் பெரிய லாபத்தை அடைவார்.”

இவ்வாறு தயாரிப்பாளர் தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!