சேவை வரி வழக்கு – நீதிமன்றத்தில் ஆஜாரானர் நடிகர் விஷால்
நடிகர் விஷால் முறையாக சேவை வரி செலுத்தவில்லை என்று அவருக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகி விளக்கம் அளிக்கத்ததால், அவர் மீது சேவை வரித்துறையினர் சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் விஷால் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது நீதிபதி, “சேவை வரித்துறையினர் பலமுறை சம்மன் அனுப்பியும் நீங்கள் அதை பெற்றுக் கொள்ளவில்லை. ஆஜராகாமல் வேண்டுமென்றே தவிர்திருக்கிறீர்கள் இது உண்மையா “என்று கேட்டார். அதற்கு நடிகர் விஷால் “இந்த குற்றச்சாட்டுகளை நான் மறுக்கிறேன்”. என்றார். பின்னர் இரு தரப்பு வாதங்களையும் நீதிபதி கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து இந்த வழக்கை வருகின்ற நவம்பர் 11ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.