ஜி.வி.பிரகாஷின் அடுத்த படத்தில் முன்று கதாநாயகிகள்

இயக்குநர் எழில் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நாயகிகளாக ஈஷா ரெபா மற்றும் நிகிஷா பட்டேல் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த படத்தில் மூன்றாவது நாயகியாக நடிக்க சாக்சி அகர்வால் ஒப்பந்தமாகியுள்ளார். இது குறித்து நடிகை சாக்சி அகர்வல் கூறுகையில், நெல்லை அருகே இருக்கும் கிராமத்து பெண்ணாக இந்த படத்தில் நடித்து வருவதாகவும், நெல்லை தமிழை உதவி இயக்குனரின் உதவியோடு கற்று வருவதாகவும் கூறினார்.