நடிகர் அசோக் செல்வனுடன் ஜோடி போடும் முன்று கதாநாயகிகள்.
சென்னை 29 ஜூன் 2021
நடிகர் அசோக் செல்வனுடன் ஜோடியாக போடும் முன்று கதாநாயகிகள்.
தமிழ் திரைப்பட உலகில் வளர்ந்து வரும் இளம் நடிகரான அசோக் செல்வன், அடுத்ததாக இவர் நடிக்கும் புதிய திரைப்படத்தை அறிமுக இயக்குனர் ஆர்.கார்த்திக் இயக்குகிறார்.
சூது கவ்வும், தெகிடி படங்களின் மூலம் பிரபலமான அசோக் செல்வன் கடந்த ஆண்டு வெளியான பிளாக்பஸ்டர் வெற்றி படமான ஓ மை கடவுளே மூலம் முன்னணி நடிகராகி விட்டார். இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
இந்நிலையில், அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்கும் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தை அறிமுக இயக்குனர் ஆர்.கார்த்திக் இயக்குகிறார்.
பெயரிடப்படாத இந்த திரைப்படத்தில் நடிகர் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடிகை ரீத்து வர்மா, நடிகை அபர்ணா பாலமுரளி, நடிகை சிவாத்மிகா ஆகிய மூன்று கதாநாயகிகள் நடிக்கின்றனர்.
இவர்களில் நடிகை ரீத்து வர்மா சியான் விக்ரமுக்கு ஜோடியாக ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்திலும், நடிகை அபர்ணா பாலமுரளி நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக ‘சூரரைப் போற்று’ திரைப்படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திரைப்படத்திற்கு ஜார்ஜி சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த திரைப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைக்கிறார்.
இந்த திரைப்படத்தை வயகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.











