Friday, August 14
Shadow

ஜூன் மாதம் 1ம் தேதி முதல் ஒளிப்பரப்பை தொடங்கியது ரஜினி70 டிவி முழுக்க முழுக்க சூப்பர் ஸ்டாரை பற்றிய (வீடியோ)

தமிழ் திரைப்பட உலகில் அன்றும் இன்றும் என்றும் சூப்பர் ஸ்டாராக திகழ்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை பற்றி சொல்ல வேண்டுமென்றால் சொல்லிக் கொண்டே இருக்கலாம். கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

கேரளா, ஆந்திரா, கர்நாடகா, பாலிவுட் என அனைத்திலும் பல சூப்பர் ஸ்டார்கள் மாறிக் கொண்டே இருக்க தமிழ் திரைப்பட உலகில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை எவராலும் இன்று வரை அசைக்க முடியாத உச்சத்தில் இருக்கிறார்.

தமிழ் திரைப்பட உலகில் ஜெய்சங்கர், சிவகுமார் காலத்திலும் ரஜினிகாந்துதான் அன்றும் சூப்பர் ஸ்டார்.

அன்றைய காலகட்டத்தில் உலக நாயகன் கமல்ஹாசன், ராமராஜன், மோகன் காலத்திலும் ரஜினிகாந்துதான் சூப்பர் ஸ்டார்

நடிகர் கார்த்திக், புரட்சி கலைஞர் விஜயகாந்த், புரட்சி தமிழன் சத்யராஜ், இளைய திலகம் பிரபு காலத்திலும் ரஜினிகாந்துதான் சூப்பர் ஸ்டார்

தளபதி விஜய், அஜித்குமார் காலத்திலும் ரஜினிகாந்துதான் சூப்பர் ஸ்டார்

தனுஷ் சிம்பு காலத்திலும் ரஜினிகாந்துதான் சூப்பர் ஸ்டார்

சிவகார்த்திகேயன் விஜய்சேதுபதி காலத்திலும் ரஜினிகாந்த் மட்டுமே சூப்பர் ஸ்டார்.

எனவே தான் அவரை பாலிவுட் கான்களே தலைவா என்று அழைக்கின்றனர்.

இந்த நிலையில் ரஜினிகாந்த் பாடல்கள், திரைப்படங்கள், ரஜினிகாந்த் பற்றி செய்திகளுக்காகவே பிரத்யேகமாக ரஜினி 70 என்ற டிவி சேனல் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த சேனல் மலேசியாவில் தன் ஒளிப்பரப்பை நேற்று ஜீன் 1 முதல் தொடங்கியுள்ளது.

இந்த சேனலின் நம்பர் 100 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் ரஜினியே தன் கட்சிக்காக ஒரு புதிய சேனலை தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதற்கு ரஜினி டிவி, தலைவர் டிவி, அல்லது சூப்பர் ஸ்டார் டிவி என்ற பெயர் வைக்கப்படலாம் எனவும் சொல்லப்படுகிறது.

அந்த சேனலின் ஓரிரு காட்சிகள் இதோ….