Sunday, June 20
Shadow

டெடி திரை விமர்சனம். ரேட்டிங் – 2.75/5

நடிகர் நடிகைகள் – ஆர்யா, சயிஷா, மகிழ் திருமேனி, சதிஷ், . கருணாகரன், மாசூம் ஷங்கர், சாக்ஷி அகர்வால், E B கோகுலன் மற்றும் பலர்.

தயாரிப்பு – ஸ்டுடியோ கிரீன் புரோடக்சன்ஸ்

இயக்கம் – சக்தி சௌந்தர் ராஜன்

ஒளிப்பதிவு – S. யுவா

படத்தொகுப்பு – T.சிவாநந்திஸ்வரன்

இசை – D. இமான்

மக்கள் தொடர்பு – யுவாராஜ்.

திரைப்படம் வெளியான தேதி – 05 மார்ச் 2021

ரேட்டிங் – 2.75/5

தமிழ் திரைப்பட உலகில் மிக வித்தியாசமான கதையை படமாக்குவதற்கு பெயர் போனவர் இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன் டெடி திரைப்படத்தின் மூலம் மீண்டும் வித்தியாசமான முயற்சியில் இறங்கியிருக்கிறார்.

இதற்கு முன்பு இவர் இயக்கிய “மிருதன், டிக் டிக் டிக்” ஆகிய திரைப்படங்களை வித்தியாசமான கொடுத்திருந்தார்.

அந்த வித்தியாசமான கதைக்களத்தில் தான் இந்த டெடி படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன்.

கதாநாயகன் ஆர்யா ஒரு மிக அதிபுத்திசாலி எதையும் உடனுக்குடன் கற்றுக்கொள்ளும் திறமை வாய்ந்தவராகவும் அதிகமான ஞாபக சக்தி படைத்தவராகவும் இருக்கிறார்.

கதாநாயகி சாயீஷாவை, திட்டம் போட்டு உடல் உறுப்பு கடத்தல் செய்யும் மெடிக்கல் மாபியா ஒரு விபத்தில் சிக்க வைக்கிறார்.

அப்போது அவருக்கு லேசாக காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.

அவருக்கு மருந்து செலுத்திய பிறகு கோமா நிலைக்கு சென்றுவிடுகிறார்.

அதன் பிறகு உண்மை தெரிந்த கதாநாயகி சயீஷாவின் ஆத்மா ஒரு டெடி பொம்மைக்குள் சென்றுவிடுகிறது.

அந்த பேசும் திறன் கொண்ட டெடி பொம்மை ஆர்யாவை சந்தித்து தன் நிலையை பற்றி கூறுகிறது.

விஷயம் அறிந்த கதாநாயகன் ஆர்யா டெடி பொம்மைக்குள் இருக்கும் கதாநாயகி சயீஷாவின் ஆத்மாவை  கதாநாயகி சயீஷா உடலுக்குள் சேர்ந்தாரா! இல்லையா கதாநாயகி சயீஷாவின் உயிரை காப்பாற்றினாரா!
இல்லையா இதுதான் இந்த டெடி திரைப்படத்தின் மீதி கதை.

கதாநாயகன் ஆர்யா தன் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.

அமைதியான முகம், கொஞ்சம் தாடி, ஒரு கண்ணாடி என அப்பாவி அதிபுத்திசாலியாக கதாநாயகன் ஆர்யா.

பார்ப்பதற்குத்தான் அப்பாவித் தோற்றம். ஆனால், எத்தனை பேர் வந்தாலும் அடித்து வீழ்த்தும் வீரம் கொண்டவர்.

ஆனால், படம் முழுவதும் அவரை அப்படியே விறைப்பாகவே இயக்குனர் நடிக்கச் சொன்னதன் காரணம்தான் புரியவில்லை.

எந்தக் காட்சியிலும் கதாநாயகன் ஆர்யாவின் முகத்தில் வேறு எந்த மாற்றமும் வரவில்லை.

ஒரே மாதிரியாக நடிக்கிறார், பேசுகிறார்.

ஆக்ஷனில் மட்டும் வேறு ஆர்யாவாகத் தெரிகிறார்.

ஆக்‌ஷன் காட்சிகளில் தூள் கிளப்பி இருக்கிறார்.

Read Also  கீ - திரை விமர்சனம்

கதாநாயகி சாயீஷா ஒரு சில காட்சிகளே வந்திருந்தாலும் அவை திரைப்படத்திற்கு பலம் சேர்க்கும் வண்ணம் உள்ளது.

அனாலும் கதாநாயகன் ஆர்யாவுடன் அவருக்கு ஒரு டூயட் பாடல் கூட வைக்காதது,

ரசிகர்களுக்கு மிக பெரிய ஏமாற்றமாக உள்ளது.

சதீஷ் வழக்கம்போல் கதாநாயகன் நண்பனாக வருகிறார்.

இதற்கு முன்பு நண்பனாக என்ன செய்தாரோ அதையே தான் இந்த படத்திலும் செய்திருக்கிறார்.

இசையமைப்பாளர் இமானின் இசை திரைப்படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது.

வழக்கமான பாணியை தவிர்த்து இசையில் வித்தியாசத்தை காட்டியிருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் வில்லனாக வரும் இயக்குநர் மகிழ் திருமேனியின் கதாபாத்திரம் பெரிதாக கவரவில்லை.

நடிப்பில் வில்லத்தனத்தை வெளிக்காட்ட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், தனது கம்பீரமான குரலின் மூலம் கவனிக்கும் வில்லனாக வலம் வருகிறார்.

கருணாகரன், சதிஷ் ஆகியோரது நகைச்சுவை காட்சிகளை விட டெடி பொம்மை செய்யும் காமெடி ரசிக்கவும், சிரிக்கவும் வைக்கிறது.

டெடி பொம்மைக்கு குரல் கொடுத்திருக்கும் இ.பி.கோகுலனின் குரலும், கரடி பொம்மை கதாப்பாத்திரமும் சிறுவர்களை மட்டும் இன்றி பெரியவர்களையும் ஈர்த்து விடுகிறது.

அனிமேஷன் கதாபாத்திரமான டெடி, படத்தின் மற்றொரு கதாநாயகன் என்றே சொல்லலாம்.

முதல் பாதியை விறுவிறுப்பாக நகர்த்திய இயக்குனர் இரண்டாம் பாதியில் கோட்டை விட்டுள்ளார்.

ஏற்கனவே பல படங்களில் சொல்லப்பட்ட விஷயமாக இருந்தாலும் அதை ஒரு பொம்மையை வைத்து வித்தியாசமாக கூறியிருப்பது பாராட்டுக்குரிய விஷயம். வித்தியாசமான முயற்சி வாழ்த்துக்கள் தெரிவிக்கலாம்.

CLOSE
CLOSE