Monday, September 20
Shadow

அன்பிற்கினியாள் திரை விமர்சனம் ரேட்டிங் – 3.75 /5

நடிகர் நடிகைகள் – அருண்பாண்டியன், கீர்த்தி பாண்டியன், ப்ரீவின் ராஜா, கோகுல், ரவீந்திரவிஜய், தீபக் ராஜ், பூபதி ராஜா,ஜெயராஜ், அடிநாட் சசி, சங்கர் ரத்னம், கௌரி, த்ரியா பாண்டியன், மோனிஷா முரளி, சந்தோஷ், மணிபாரதி மற்றும் பலர்.

தயாரிப்பு – ஏ & பி க்ருப்ஸ்

இயக்கம் – கோகுல்

ஒளிப்பதிவு – மகேஷ் முத்துசாமி

படத்தொகுப்பு – பிரதீப் ஈ ராகவ்

இசை – ஜாவித் ரியாஸ்

மக்கள் தொடர்பு – யுவாராஜ்.

திரைப்படம் வெளியான தேதி – 05 மார்ச் 2021

ரேட்டிங் – 3.75 /5

மலையாள திரைப்பட உலகில் கடந்த 2019-ம் ஆண்டு வெளி வந்து மாபெரும் வெற்றி பெற்ற ஹெலன் திரைப்படத்தை மதுக்குட்டி சேவியர் இயக்கி இருந்தார்.

அந்த ஹெலன் திரைப்படத்தை தமிழில் அன்பிற்கினியாள் என்ற பெயரில் மொழி மாற்றம் செய்து அதன் அடிப்படை கதை கொஞ்சம் கூட மாறாமல் தந்தை மகள் பாச உறவை மையமாக வைத்து இயக்கியிருக்கிறார் இயக்குநர் கோகுல்.

பாசம், காதல், காவல் துறை கெடுபிடி, விசாரணை, செண்டிமெண்ட் என்று அனைத்தும் கலந்து பாசிடிவ் வைப்ரேஷனோடு இந்த திரைப்படத்தை கொடுத்து திகில் பாதையில் சென்று வெற்றி திசையில் பயணிக்கிறார் இயக்குனர் கோகுல்.

ரெளத்ரம், இதுக்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா ஜூங்கா ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் கோகுல்தான் இந்த அன்பிற்கினியாள்

திரைப்படத்தை சிறப்பாக இயக்கியிருக்கிறார்.

கதாநாயகி கீர்த்தி பாண்டியன் நடிகர் அருண் பாண்டியனின் மகளாக வரும் இவர் ஒரு சிக்கன் ஹப் ஸ்டாலில் பணிபுரிகிறார்.

மேலும், இவர் நர்ஸிங் படித்து கனடா செல்ல முயற்சித்தும் வருகிறார்.

அம்மா இல்லாததால் அப்பா அருண்பாண்டியன்னின் அதிகமான பாசத்தில் வளர்கிறார் கதாநாயகி கீர்த்தி பாண்டியன்.

எதுவானாலும் அப்பாவிடம் சொல்லக்கூடிய அளவிற்கு மிகவும் நட்பான பாசத்தில் வளர்கிறார் கீர்த்தி பாண்டியன்.

காதலை மட்டும் சொல்லாமல்.

கதாநாயகன் ப்ரவின் ராஜாவை தனது தந்தைக்கு தெரியாமல் காதலித்து வருகிறார் கீர்த்தி பாண்டியன்.

ஒருநாள் காதலனும் காதலியும் இரவில் இருசக்கர வாகனத்தில் வரும் போது போலீஸால் சிக்க, விஷயம் அப்பா அருண் பாண்டியனிடம் தெரிவிக்கப்படுகிறது.

கதாநாயகன் ப்ரவின் ராஜாவுடனான காதலை தன்னிடம் கூறவில்லை எனக்கூறி மகளிடம் கோபித்துக் கொள்கிறார் அப்பா அருண்பாண்டியன்.

மனக்கவலையில் இருக்கும் கதாநாயகி கீர்த்தி பாண்டியன் பணிபுரியும் சிக்கன் ஹப் ஸ்டாலில் கடையின் மேலாளர் எதிர்பாராத விதமாக சிக்கன் பதப்படுத்தப்படும் குளிர்சாதன அறைக்குள் கீர்த்தி பாண்டியன் பூட்டப்பட்டு விடுகிறார்.

Read Also  கோமாளி - திரை விமர்சனம்

இரவு நெடு நேரமாகியும் வீட்டிற்கு வராததால் கதாநாயகி கீர்த்தி பாண்டியன்னை தேடி அலைகிறார் அப்பா அருண்பாண்டியன்.

கதாநாயகி கீர்த்தி பாண்டியன் கிடைத்தாரா இல்லையா..? அப்பா மகளின் பாசப்போராட்டம் ஜெயித்ததா இல்லையா,.? கீர்த்தி பாண்டியன் காதலை ஏற்றுக் கொண்டாரா இல்லையா..? என்பதே இந்த அன்பிற்கினியாள் திரைப்படத்தின் மீதிக் கதை.

இந்த அன்பிற்கினியாள் திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அருண் பாண்டியனுக்கு இது ஒரு வித்தியாசமான முயற்சி தான்.

எப்போதும் அதிரடி சண்டைக்காட்சிகளுக்கு மட்டுமே பெயர் போன அருண் பாண்டியன் தனது மகளுடன் பாச மழையை பொழிவதிலும் சரி அரட்டை அடிப்பதிலும் சரி மகள் காணாமல் போனதை அறிந்து மனம் உடைந்து போவதிலும் சரி என அனைத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

பதினாறு வருடங்களுக்கு பிறகு அப்பாவாக ரீ என்ட்ரி கொடுத்திருக்கும் அருண்பாண்டியன் அவருக்கு மகளாக கீர்த்தி பாண்டியன் இருவரும் சேர்ந்து மிகையில்லா நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

அதிலும் கீர்த்தி பாண்டியன் இரண்டாம் பாதியில் சிக்கலில் மாட்டிக்கொண்டு தவிக்கும் இடங்களில் அதிலிருந்து தப்பிக்க எடுக்கும் முயற்சிகள் என்று முடிந்தவரை சிரமப்பட்டு அனைவரின் கவனத்தை ஈர்த்து சவாலோடு நடித்திருப்பது பாராட்டுக்குரியது.

மிக கச்சிதமான நடிப்பை, யதார்த்தமான நடிப்பை கொடுத்து அன்பிற்கினியாள் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார் கீர்த்தி பாண்டியன்.

அதிலும் இடைவேளைக்கு பிறகு எழுந்து நின்று கைதட்டும் அளவிற்கு மிக அற்புதமாக நடித்திருக்கிறார் கதாநாயகி கீர்த்தி பாண்டியன்.

காதலனாக வரும் ப்ரவீனுக்கு இது அறிமுக படம் என்றாலும், அனுபவ நடிகனை போன்று நடித்து அசத்தியிருக்கிறார்.

போலீஸ் எஸ் ஐ’ஆக வரும் ரவீந்திர விஜய், தனது கதாபாத்திரத்தை செவ்வென செய்திருக்கிறார்.

கண் பார்வையிலேயே வில்லத்தனத்தை கொண்டு வந்து மிரட்டுகிறார்.

மலையாள திரைப்படத்தின் மொழி மாற்றம் செய்யப்பட்ட திரைப்படம் என்றாலும், தமிழில் சரியான திரைக்கதையை கொடுத்திருக்கிறார் இயக்குனர் கோகுல்.

இடைவேளைக்கு பிறகு அனைவரையும் சீட்டின் நுனியில் இருக்க வைத்து படபடப்பை பல மடங்கு ஏற்றியிருக்கிறார் இயக்குனர் கோகுல்.

படபடப்பையும், பரிதாபத்தையும் கொண்டு வர ஜாவித் ரியாஸின் பின்னணி இசை பெரிதும் கை கொடுத்துள்ளது.

பாடல்கள் எதுவும் மனதில் பதியவில்லை என்றாலும், பின்னணி இசை பலம்.

இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரும் பலம் என்றால் அது மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு தான். ஒவ்வொரு காட்சியையும் அக்கறையுடன் செய்து அதை சரியான முறையில் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி.

திரைப்படத்தின் ஓட்டத்திற்கு மற்றொரு பலம் என்னவென்றால் அது கலை இயக்குனர் தான்.

படத்தொகுப்பு பிரதீப் ஈ.ராகவ் முதல் பாதியில் சில காட்சிகள் கவனம் செலுத்தி எடிட் செய்திருந்தால்  இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும்.

Read Also  மாயநதி திரை விமர்சனம். ரேட்டிங் - 2.5/5

நச்சென்ற வசனத்தில் கோகுல் ஜான்மகேந்திரன் இருவரும் பளிச்சிடுகிறார்கள்.

முதல் பாதியில் அருண்பாண்டியன் மற்றும் கீர்த்தி பாண்டியனின் நடிப்பு கொஞ்சம் ஓவர் டோஸ் ஆகிவிட்டது போன்ற மனநிலை ஏற்படுகிறது.

தமிழுக்கு இந்தக் கதை புதுசுதான். நிச்சயம் வரவேற்கப்படும் என்றே நம்புகிறேன்.

அன்பிற்கினியாள் திரைப்படம்  அனைவரையும் மீதும் அன்பு செலுத்த வைப்பாள் இந்த அன்பிற்கினியாள்!

CLOSE
CLOSE