புரட்சித் தலைவி ஜெயலலிதா தான் இறந்துவிட்டாரே அவர் எப்போது ட்விட்டருக்கு எதிராக வேண்டுகோள் விடுத்தார்? என நீங்கள் யோசிக்கலாம்.
இது ஜெயலலிதாவின் வாழ்க்கை படமான ‘தலைவி’ படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் கங்கனா ரனாவத் பற்றிய தகவல் தான்.
பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் தனு வெட்ஸ் மனு, ஃபேஷன், குயின் ஆகிய படங்களில் சிறப்பாக நடித்ததற்காக 3 தேசிய விருதுகளை வென்றிருக்கிறார்.
இவரின் சகோதரி ரங்கோலி தான் கங்கனாவின் ட்விட்டர் கவனித்து வருகிறாராம்.
சில தினங்களுக்கு முன்பு ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்களைப் பற்றி ஒரு கருத்தை பதிவிட்டிருந்தார்.
அதற்கு பாலிவுட் பிரபலங்கள் கூட எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இதனால் கங்கனா கணக்கை ட்விட்டர் நிறுவனம் நீக்கியது .
இதனையடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டார் கங்கனா ரனாவத்.
அதில்… “மருத்துவரையும், காவல்துறையினரையும் தாக்கியவர்களைத் தான் சுட்டுக் கொல்ல வேண்டும் என்று தான் என் சகோதரி கருத்து தெரிவித்திருந்தார்.
எந்த ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் பற்றியும் அவர் பேசவில்லை.
பிரதமர், உள்துறை மந்திரி ஆகியோரை தீவிரவாதிகள் என்று சொல்பவர்களை டுவிட்டர் ஒன்றும் செய்யாமல் விட்டு விடுகிறது.
உண்மையான தீவிரவாதிகளை தீவிரவாதிகள் என்று சொன்னால் நடவடிக்கை எடுக்கிறது.
எனவே ட்விட்டர் போன்ற தளங்களை இந்தியாவில் இருந்து ஒழிக்க வேண்டும்.
அதற்குப் பதிலாக நம் இந்தியாவைச் சேர்ந்த சமூக வலைத்தளத்தை உருவாக்க வேண்டும் என தலைவி கங்கனா கூறியுள்ளார்.