தனுஷுடன் நடித்த ராசிதான்.; தேசிய விருதை வென்ற நடிகை கீர்த்தி சுரேஷ்.

இன்று அறிவிக்கப்பட்ட 66வது தேசிய விருதுகள் பட்டியலில் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு ‘மகாநடி’ என்ற தெலுங்கு படத்தில் நடித்ததற்காகக சிறந்த நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படம் என்பதும் இப்படத்தை தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரில் வெளியிட்டதும் நாம் அறிந்த ஒன்றுதான்.

இப்படத்தில் கீர்த்தி எப்படி வாய்ப்பு பெற்றார்? என்பது சிலருக்கு தெரியாமல் இருக்கலாம்.

அவர் தனுஷ் உடன் இணைந்து நடித்த தொடரி படத்தை பார்த்த இயக்குனர் நாக் அஸ்வின் அவர்கள், கீர்த்தியின் அப்பாவித்தனமாக நடிப்பை கண்டு வியந்துதான் அந்த வாய்ப்பை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுபோல் தன் இளம் வயதிலேயே தனுஷ்ம் ஆடுகளம் படத்தில் நடித்தற்காக தேசிய விருதை பெற்றார் என்பதும் தங்களுக்கு நினைவிருக்கலாம்.