Friday, June 18
Shadow

தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் சூப்பர் ஸ்டாரை ஏன் சேர்க்கவில்லை?

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் முயற்சியால் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற புதிய சங்கம் சமீபத்தில் தொடங்கப்பட்டது.

என்பது தெரிந்ததே இந்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தற்போது திரைப்படங்கள் தயாரித்துக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர்கள் மட்டுமே உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

நீண்ட காலமாக திரைப்படங்கள் தயாரிக்காமல் இருக்கும் தயாரிப்பாளர்களுக்கு இந்த தமிழ் திரைப்பட நடப்பு சங்கத்தில் அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் உலக நாயகன் கமலஹாசன் இயக்குநர் மணிரத்னம் உள்பட பல முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்து உள்ளனர்.

ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் மட்டும் இந்த சங்கத்தில் பதிவு செய்யப்படவில்லை. அவரும் இந்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தில் சேர விரும்பவில்லை என்று கூறப்படுகிறது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே எந்த திரைப்படத்தையும் தயாரிக்கவில்லை என்பதால் தான் அந்த சங்கத்தின் சேர்வது தார்மீக அடிப்படையில் சரியில்லை என்று நம்புவதாகவும் இருப்பினும் சங்கத்தின் தலைவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர் இணைய விருப்பம் தெரிவித்தால் சேர்த்துக் கொள்ள தயாராக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும் இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் புதிய தமிழ் திரைப்பட நடப்பு சங்கத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆதரவு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது

CLOSE
CLOSE