Saturday, August 15
Shadow

தமிழ் திரைப்பட உலகில் குரூப்பிஸம் இருக்கிறது ஒழிக்கப்படனும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி

பாலிவுட் திரைப்பட உலகில் பெரிய தயாரிப்பாளர் பெரிய இயக்குநர்கள் வாரிசு அரசியல் இருப்பதாக தொடர் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.

இதை தொடர்ந்து நடிகர் நட்டி நட்ராஜ், நடிகர் சாந்தனு ஆகியோரும் தமிழ் திரைப்பட உலகில் குழு அரசியல் இருப்பதாக கருத்து பதிவிட்டு இருந்தனர்.

தமிழ் திரைப்பட
தயாரிப்பாளர்களிடையே
தமிழ் திரைப்பட உலகில் குரூப்பிஸம் இருக்கிறது என்று பிரபல தயாரிப்பாளர் குற்றம் சாட்டியுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்குப் பிறகு பாலிவுட்டில் வாரிசு அரசியல் சர்ச்சை பெரிதாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.

வாரிசு அரசியல் தொடர்பாக அனைத்துத் திரையுலகிலிருந்தும் முன்னணி நடிகர்கள் கருத்துத் தெரிவித்து வருகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு ஏ.ஆர்.ரஹ்மான் வைத்த குற்றச்சாட்டும் பெரும் விவாதமாக உருவெடுத்தது.

இவர்களை அடுத்து சிம்புவின் ‘மாநாடு’ திரைப்பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் தயாரிப்பாளர்களிடையே குரூப்பிசம் இருப்பதாக கருத்து பதிவிட்டுள்ளார்.

சுரேஷ் காமாட்சி கூறியிருப்பதாவது…

“பாலிவுட்டில் மட்டுமல்ல குரூப்பிஸம் இங்கும் உள்ளது. நடிகர்களிடம் உள்ளதோ இல்லையோ ஒருசில தயாரிப்பாளர்களிடம் உள்ளது.

அவர்களால்தான் மிகப் பழமையான தயாரிப்பாளர்களும் ஒதுங்கியிருப்பதுவும் அதனால்தான்.

தான் மட்டுமே வாழவேண்டும் என நினைக்கும் அந்த பிரபல தயாரிப்பாளர் தன் பலத்தால் சில பல தயாரிப்பாளர்களை உடன் சேர்ந்துகொண்டு பலரை வாழவிடாமல் கெடுத்துக்கொண்டிருக்கிறார்.

ஹீரோக்களுக்கு போன் பண்ணி கெடுத்துவிடுவதும், ஃபைனான்சியர்களை கலைத்துவிடுவதும், படத்தைப் பற்றி கேவலமாக கிளப்பிவிட்டு விநியோகஸ்தர்களிடம் பீதியை உருவாக்குவதுமாக முன்னால் விட்டு பின்னால் செய்யும் வேலையை வெற்றிகரமாக செய்துவருகிறார்.

அதற்கு சில தயாரிப்பாளர்கள் உடன் பட்டு நிற்பதுதான் வேதனை. வெகுவிரைவில் முகத்திரைகள் கிழியும். அதற்கு நடுவில் பாலிவுட் போல யாரும் தற்கொலை அது இதுன்னு இறங்கிவிடக்கூடாது. குரூப்பிஸம் விரைவில் ஒழிக்கப்பட வேண்டும்.” என்று கூறியுள்ளார்.