நடிகர் மற்றும் இயக்குனர் தனுஷ் தமிழ் திரைப்பட உலகில் உள்ள தமிழ் பத்திரிக்கையாளர்களை  தொடர்ந்து புறக்கணித்து வருவது ஏன்? 

நடிகர் மற்றும் இயக்குனர் தனுஷ் தமிழ் திரைப்பட உலகில் உள்ள தமிழ் பத்திரிக்கையாளர்களை  தொடர்ந்து புறக்கணித்து வருவது ஏன்? 

சென்னை 24 ஜூலை 2024 சன் பிக்சர்ஸ் நிறுவனம்  சார்பில் கலாநிதி மாறன் தயாரிப்பில் நடிகர் தனுஷ் இயக்கி கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் “ராயன்”.

மேலும், நடிகர்கள் எஸ் ஜே சூர்யா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன், திலீபன் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் இந்த ராயன்  திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.

இந்த ராயல் திரைப்படத்திற்கு ஆஸ்கார் நாயகன் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

நாளை 26/07/2024 அன்று உலகம் முழுவதும் இந்த ராயன் திரைப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது.

திரைப்படத்தினை பார்த்த சென்சார் அதிகாரிகள், திரைப்படத்தில் அதிகப்படியான ரத்தம் தெறிக்கும் காட்சிகள் பல இருப்பதால் படத்திற்கு “ஏ” தரச் சான்றிதழ் கொடுத்திருக்கின்றனர்.

A தரச் சான்றிதழால் குடும்பமாக திரைப்படம் சென்று பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால், இந்த ராயன் திரைப்படம் வசூலில் பெரிதாக
இருக்காது என்றும் பலர் கூறி வருகிறார்கள்.

இந்த நிலையில், சில தினங்களுக்கு முன் ராயன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிகப்பெரிய கல்லூரியில்  நடைபெற்றது.

இந்த ராயன் இசை வெளியீடு விழாவில் , தமிழ் திரைப்பட உலகை சேர்ந்த பத்திரிகையாளர்கள் யாருக்கும் அழைப்பு இல்லை.

அதுமட்டுமல்லாமல், திரைப்படம் சார்ந்த ப்ரொமோஷன் எதுவும் தமிழ்நாட்டில் தமிழ் திரைப்பட உலகில் உள்ள பத்திரிகையாளர்களுக்கு நடத்தப்படவில்லை..

ஆந்திராவிற்கு சென்று, தெலுங்கு திரைப்பட பத்திரிகையாளர்களை அழைத்து பத்திரிகையாளர் சந்திப்பை நிகழ்த்தியிருக்கிறார் நடிகர் தனுஷ்.

தமிழ் திரைப்பட உலகில்  ஒட்டுமொத்தமாக புறக்கணித்திருக்கிறார் நடிகரும் இயக்குனருமான தனுஷ்.

இந்த ‘ராயன்’ திரைப்படத்திற்கு மட்டுமல்ல, நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவரும் அனைத்து  திரைப்படங்களுக்கும் தமிழ் திரைப்பட உலகில் உள்ள பத்திரிகையாளர்கள் சந்திப்பை தொடர்ச்சியாக தவிர்த்து வருவதை இது ஒரு வேலையாகவே வைத்திருக்கிறார் நடிகர் தனுஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!