தமிழ் திரைப்பட உலகில் அறிமுகமாகும் கன்னட சூப்பர் ஸ்டாரின் பேத்தி.

சென்னை 28 ஜூலை 2021தமிழ் திரைப்பட உலகில் அறிமுகமாகும் கன்னட சூப்பர் ஸ்டாரின் பேத்தி.

கன்னட திரைப்பட உலகில் சூப்பர் ஸ்டார் என்றால் அது நடிகர் ராஜ்குமார் தான். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு நெருங்கிய நண்பர் ஆவார்.

சந்தன கடத்தல் வீரப்பன் இவரை கடத்தி காட்டிற்கு அடைத்து வைத்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

நடிகர் ராஜ்குமார் மற்றும் வீரப்பன் இருவருமே தற்போது உயிருடன் இல்லை.

நடிகர் ராஜ்குமாரின் மகன்கள் சிவராஜ்குமார், புனித் ராஜ்குமார், ராகவேந்திரா ராஜ்குமார் ஆகியோர் கன்னட திரைப்பட உலகில் முன்னணி நட்சத்திரங்களாக உள்ளனர்.

இந்த நிலையில் தற்போது நடிகர் ராஜ்குமாரின் மகள் வழி பேத்தியான தன்யா ராம்குமார் என்பவர் தமிழ் திரைப்பட உலகில் அறிமுகமாக இருக்கிறார்.

அவர் நடிக்கவுள்ள திரைப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே சில கன்னட திரைப்படங்களில் தன்யா நடித்துள்ளார்.

error: Content is protected !!