Monday, September 27
Shadow

தலைவி திரை விமர்சனம். ரேட்டிங் –2.5 /5

நடிகர் நடிகைகள் – அரவிந்த் சாமி, கங்கனா ரனாவத், பூர்ணா, ரெஜினா கெஸன்ட்ரா, சமுத்திரகனி, நாசர், தம்பி ராமையா, மணிகண்டன், ஜெயக்குமார், ராதாரவி, சண்முகராஜன்,பாரதி கண்ணன், பாக்யஸ்ரீ, மதுபாலா, & மற்றும் பலர்.

தயாரிப்பு – ஜீ ஸ்டுடியோஸ், விப்ரி மோஷன் பிக்சர்ஸ், கர்மா மீடியா மற்றும் என்டர்டைன்மென்ட்,
கோதிக் என்டர்டைன்மென்ட்,
ஸ்பிரிண்ட் பிலிம்ஸ்,

இயக்கம் – விஜய்.

ஒளிப்பதிவு – விஷால் விட்டல்.

படத்தொகுப்பு – ஆண்டனி.

இசை – ஜி வி பிரகாஷ் குமார்.

மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா Done,

திரைப்படம் வெளியான தேதி – 10 செப்டம்பர் 2021

ரேட்டிங் –2.5 /5

திரைப்பட துறையில் உள்ள நடிகர் நடிகைகள் அரசியல்வாதிகள் மற்றும் பிரபலமானவர்களின் பயோபிக் திரைப்படம் என்றால் அவர்களது வாழ்க்கை வரலாறுதான் அந்த பிரபலத்தின் அவரது வாழ்க்கையில் நடந்த விஷயங்களை உள்ளது உள்ளபடி கண்டிப்பாக சொல்ல வேண்டும்.

ஆனால், இந்த தலைவி திரைப்படத்தைப் பொறுத்தவரையில் மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் பயோபிக் திரைப்படம் தானா என்று மிகவும் பலத்த சந்தேகத்தை ஆழ்த்தியுள்ளது.

இந்த தமிழ் திரைப்பட உலகில் ஒரு நடிகையாக இருந்து மிக பெரிய முன்னணி நடிகையாக உயர்ந்து திரைப்பட துறையில் வாய்ப்புகளை இழந்து கஷ்டப்பட்டு தட்டுத்தடுமாறி
அரசியலில் வந்து, அங்கு பல பேரின் பல விதமான எதிர்ப்புகளையும் மீறி அந்த எதிர்ப்புகளை சமாளித்து தமிழ் நாட்டின் முதலமைச்சராக உட்கார்ந்த ஒரு பெண்ணின் கதைதான்.

மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா
வாழ்க்கை வரலாறு திரைப்படம் போல இல்லை.

சமீபத்தில் தெலுங்கு வெளிவந்த வாழ்க்கை வரலாறு திரைப்படங்களில் மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக நடிகையர் திலகம் திரைப்படம் ஒரு முழுமையான பயோபிக் திரைப்படமாக அமைந்தது.

ஒளிவு மறைவில்லாத நடிகையர் திலகம் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக கொடுத்திருந்தார்கள்.

வாழ்க்கை வரலாறு என்றால் அப்படியான நடிகையர் திலகம் திரைப்படம் போல்
உண்மை பேசும் திரைப்படமாகத்தான் இருந்திருக்க வேண்டும்.

அதனால், இந்த தலைவி திரைப்படத்தை வாழ்க்கை வரலாறு என்று சொல்லாமல் இருப்பதே நல்லது.

ஆனால், மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதாவின் பயோபிக்கை அப்படி உருவாக்கவும் முடியாது.

சில பல ரகசியங்கள் அடங்கிய வாழ்க்கைதான் மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கை.

அதை அப்படியே வெளிப்படையாகவும் சொல்ல முடியாது.

1965 ஆம் ஆண்டு முதல் 1991 ஆம் ஆண்டு வரை மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதாவின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தலைவி திரைப்படத்தை உருவாக்கினார் இருக்கிறார் இயக்குனர் விஜய்.

Read Also  மாயநதி திரை விமர்சனம். ரேட்டிங் - 2.5/5

அரசியல் காரணம் சொல்லி, ஜெயாலலிதாவை விட்டு எம்.ஜி.ஆர் விலகுகிறார்.

ஒரு கட்டத்தில் அரசியலுக்கு வருகிறார் ஜெயாலலிதா.

முதல்வராகத்தான் மீண்டும் நுழைவேன் என சபதம் எடுக்கிறார்.

அந்த சபதத்தில் வெற்றி பெற்றரா இல்லையா.

இறுதியில் எப்படி அரசியலில் ஜெயித்து முதலமைச்சர் ஆனார் என்பதே இந்த தலைவி திரைப்படத்தின் மீதிக்கதை.

தமிழ்நாட்டில் உள்ள மக்கள் கொண்டாடும் திரைப்பட கதாநாயகனான எம்ஜிஆருடன் ஜெ.ஜெயலலிதா அவர்கள்
தனது 16 வது வயதிலேயே எம்ஜிஆருக்கு ஜோடியாக நடித்தவர் செல்வி ஜெ.ஜெயலலிதா.

1965ல் நடிகையாக இருக்கும் ஜெ‌ ஜெயலலிதா கதாநாயகி கங்கனா ரனாவத் முன்னணி நடிகராக இருக்கும் எம்.ஜி.ஆர் கதாநாயகன் அரவிந்த் சாமி இணைந்து நடிக்கிறார்.

தமிழக ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போக தொடர்ந்து சில திரைப்படங்களில் ஜோடியாக நடித்தார்கள்.

அப்போது, எம்.ஜி.ஆரின் நற்குணங்களை கண்டு வியந்து அவர் மீது ஜெயலலிதாவவிற்கு ஈர்ப்பு ஏற்படுகிறது.

தன்னை விட மிகவும் வயது மூத்தவரான எம்ஜெஆர் மீது காதலில் விழுகிறார் ஜெயலலிதா.

முதலில் அதை ஏற்க மறுக்கும் எம்.ஜி.ஆரும் போகப்போக ஜெயலலிதாவின் அன்பில் சிக்கிக் கொள்கிறார்.

எம்.ஜி.ஆருடன் பயணிக்கும் ஆர்.என்.வீரப்பன் (சமுத்திரகனி), ஜெயலலிதாவை, எம்.ஜி.ஆரிடம்இருந்து பிரிக்க முயற்சிக்கிறார் ஆர்.என்.வீரப்பன் (சமுத்திரகனி),

அண்ணா மற்றும் கருணாநிதியுடன் அரசியலிலும் செயல்படும் எம்.ஜி.ஆர் ஒரு கட்டத்தில் தான் சார்ந்த கட்சியிலிருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பிக்கிறார்.

அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல வேண்டி இருப்பதால் ஜெயாலலிதா உடனான அன்பை முறித்துக் கொள்கிறார்.

அதன்பின் ஜெயாலலிதாவிற்கும் சினிமா வாய்ப்புகள் குறைகிறது.

தனிக்கட்சி ஆரம்பித்து வெற்றி பெற்று
எம்.ஜி.ஆர் தமிழகத்தில் முதலமைச்சர் ஆகிறார்.

ஒரு விழாவில் நடனமாட வரும் ஜெயாலலிதா சந்திக்கும் எம்.ஜி.ஆர், ஜெயாலலிதாவை தனது கட்சிக்யில் சேர வைத்து பணியாற்ற வைக்கிறார்.

அவரை எம்.பி.யாகவும் ஆக்கி டில்லிக்கு அனுப்புகிறார் எம்.ஜி.ஆர்.

டில்லியில் கூட்டணி பேசும் அளவிற்கு வளரும் ஜெயாலலிதாவை திடீரென எம்.ஜி.ஆர் அடிப்படை உறுப்பினரில் இருந்து கட்சியை விட்டு நீக்குகிறார்கள்.

அரசியலிலிருந்து ஒதுங்குகிறார் ஜெயாலலிதா.

எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின் கட்சி அவரது பின்னால் போகிறது.

அரசியல் களத்திற்கு வந்து கட்சியைக் கைப்பற்றுகிறார்

எம்எல்ஏ ஆகவும் ஆகி எதிர்க்கட்சித் தலைவராகவும் சட்டசபை செல்பவருக்கு ஆளும் கட்சியால் பெருத்த அவமானம் நேர்கிறது.

அப்போது அங்கு நடைபெறும் அடிதடியில் அவமானப்படுத்தப்பட்ட ஜெயாலலிதா, “நான் இனி முதல்வரான பிறகுதான் இந்த சட்டசபைக்குள் நுழைவேன்” எனச் சபதம் செய்கிறார்.

இதையடுத்து ஜெயாலலிதா முதல்வரானாரா, சட்டசபைக்குள் நுழைந்தார்.,

எம்.ஜி.ஆர்.ஆக நடித்திருக்கும் அரவிந்த் சாமி கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்.

இந்த தலைவி திரைப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரமாக கங்கனா வாழ்ந்து இருக்கிறார் என்றே சொல்லலாம்.

Read Also  சிந்துபாத் - திரை விமர்சனம்

ஒரு சில இடங்களில் ரசிக்க வைத்து இருக்கிறார்.

வெகுளித்தனமாக ஆரம்பிக்கும் இவரின் நடிப்பு, அழுகை, ஏக்கம், துணிச்சல், கம்பீரம் எனப் பளிச்சிடுகிறார்.

எம்.ஜி.ஆராக வரும் அரவிந்த் சாமி மற்றும் ஜெயாலலிதாவாக வரும் கங்கனா ரனாவதின் நடிப்பில் குறையில்லை. ஆனால், இவர்களை எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஆர்.என்.வீரப்பன் அவர்களை இந்த தலைவி திரைப்படத்தில் வில்லனாகவே காண்பித்து உள்ளனர்.

வில்லன் ஆர்.என்.வீரப்பன் வரும் சமுத்திரகனி கதாபாத்திரத்தில் மிரட்டி இருக்கிறார் .

பார்க்கும் பார்வையிலேயே பல விதமான வசனங்கள் பேசுகிறார்.

கருணாநிதியாக வரும் நாசர் எம்.ஆர்.ராதாவாக வரும், ராதாரவி ஆகியோர் அவர்களுடைய அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

சசிகலாவாக வரும் பூர்ணாவிற்கு அதிகம் வேலையில்லை.

ஜெயாலலிதாவின் உதவியாளராக மாதவன் கதாபாத்திரத்தில் வரும் தம்பி ராமையா தான் மற்ற நடிகர்களில் கவனம் ஈர்ப்பவர்.

ஜெயாலலிதாவின தாயாக வரும் பாக்யஸ்ரீ, ஜானகி கதாபாத்திரத்தில் வரும் மதுபாலா சில காட்சிகளில் வந்து போகிறார்கள்.

மற்ற கதாபாத்திரங்களுக்கு பெரிய முக்கியத்துவம் இல்லை.

சினிமாவிற்காக திரைக்கதையில் மாற்றம் செய்து இருக்கிறார் இயக்குனர் விஜய்.

கங்கனா ரனாவத் நடிகையாக அறிமுகமாகும் காட்சிகளை குறைத்து இருக்கலாம்.

அதுபோல் முதல் பாதி நீளத்தை குறைத்து இருந்தால் கூடுதலாக ரசித்து இருக்கலாம்.

ஜி.வி பிரகாஷ்குமார் இசையில் பின்னணி இசை திரைப்படத்துடன் ஒன்றி இருக்கிறது.

பாடல்கள் கேட்கும் போது ரசிக்க வைக்கிறது,

வெளியில் வந்ததும் மறந்து போகிறது.

ஜெயாலலிதாவின் அறிமுகப் பாடலில் ஹிந்தி வாடை அடிக்கிறது.

இந்த தலைவி திரைப்படத்தின் கலை இயக்குனர் ராமகிருஷ்ணா, மோனிகா நிகோட்ரி ஆகியோருக்கு அதிக வேலை.

அந்தக் காலத்தை நம் கண்முன் அப்படியே கொண்டு வந்திருக்கிறார்கள்.

விஷால் விட்டல் ஒளிப்பதிவு காலங்களை அப்படியே பதிவு செய்துள்ளது.

மதன் கார்க்கியின் வசனம் சில இடங்களில் ஷார்ப் ஆக இருக்கிறது.

தலைவி திரைப்படத்தில் கிளைமாக்ஸ் காட்சியை தவிர மற்ற காட்சிகள், சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை.

ஜெயாலலிதாவை பற்றி வெளிப்படையாகச் சொன்னால் எதிர்ப்பு வந்துவிடுமோ என்று தயங்கித் தயங்கி காட்சிகளை அமைத்து இருக்கிறார்கள்.

அதுவே திரைப்படத்திற்கு எதிராக அமைந்திருக்கிறது.

எந்தத் தயக்கமும் இன்றி உள்ளதை உள்ளபடி சொல்லியிருந்தால் உன்னதத் தலைவியாக அமைந்திருக்கும்.

அதுபோல் ஜெயலலிதாவின் திரைப்பட காட்சிகளை குறைத்துவிட்டு இன்னும் கொஞ்சம் அரசியல் பயணத்தை காட்டியிருக்கலாம்.

மொத்தத்தில் தலைவியாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

CLOSE
CLOSE