Sunday, July 12
Shadow

தளபதிக்காக சரித்திர கதையுடன் காத்திருக்கும் நடிகர் இயக்குனர் சசிகுமார்

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என் பலமுகங்கள் கொண்டவர் தான் நடிகர் இயக்குனர் சசிகுமார்.

இவரின் சமீபத்திய பேட்டி ஒன்றில் இவர் இயக்கவுள்ள சரித்திர கதையில் நடிகர் தளபதி விஜய் நடிப்பது குறித்து பேசியுள்ளார்.

அதில்…’வரலாற்றுக் காலத்து உடைகள் அணிந்து சரித்திர கதையம்சம் உள்ள திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கில்லை.

ஆனால் வரலாற்று கதையை இயக்க ஆர்வமாக உள்ளது.

அதற்கான கதை ஒன்றை தயார் செய்து நடிகர் தளபதி விஜய்யிடம் கூறினேன். அவருக்கு கதை பிடித்துவிட்டது. திரைப்படத்தில் நடிக்க சம்மதித்தார்.

ஆனால் பட்ஜெட் உள்ளிட்ட காரணங்களால் திரைப்படம் தொடங்கப்படவில்லை.

ஆனால் விரைவில் நடிகர் தளபதி விஜய்யுடன் சேர்ந்து அந்த வரலாற்று கதையை திரைப்படமாக்குவேன் என தெரிவித்துள்ளார் நடிகர் இயக்குனர் சசிகுமார்.