இயக்குனர் பாக்யராஜ் இயக்கி நடித்த முந்தானை முடிச்சு திரைப்படத்தின் ரீமேக்கில்…. நடிக்கும் பிரபல கதாநாயகன்

37 வருடங்களுக்கு பிறகு ரீமேக் செய்யப்பட உள்ள பாக்யராஜின் முந்தானை முடிச்சு திரைப்படத்தில் பிரபல கதாநாயகன் சசிகுமார் நடிக்க உள்ளார்.

பாக்யராஜ், ஊர்வசி நடிப்பில் கடந்த 1983-ம் வருடம் வெளியான திரைப்படம் முந்தானை முடிச்சு. ஏ.வி.எம். நிறுவனம் தயாரித்த இந்த திரைப்படத்தை பாக்யராஜ் அவர்களே இயக்கி இருந்தார்.

இந்த முந்தானை முடிச்சு திரைப்படத்திற்கு இசைஞானி
இளையராஜா இசையமைத்திருந்தார்.

இந்த முந்தானை முடிச்சு திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம், இந்தி, தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.

இந்நிலையில், தற்போது 37 வருடங்களுக்கு பிறகு ரீமேக் செய்யப்பட உள்ளது.

இதன் ரீமேக் உரிமையை ஏ.வி.எம். நிறுவனத்திடம் இருந்து ஜே.எஸ்.பி. சதீஷ் ஸ்டூடியோஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்த திரைப்படத்தையும் இயக்குனர் பாக்யராஜ் தான் இயக்க உள்ளார்.

இதில் கதாநாயகனாக சசிகுமார் நடிக்க உள்ளார். இதர நடிகர், நடிகைகள் தேர்வு ஊரடங்கு உத்தரவுக்கு பின் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெறும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!