தளபதி – தல ரசிகர்களை சமாதானம் செய்யும் நடிகர் சாந்தனு பாக்யராஜ்.

தளபதி விஜய் தீவிர ரசிகர் நடிகர் சாந்தனு பாக்யராஜ் என்பது நமக்கு தெரிந்த விஷயம்தான்.

விரைவில் வெளியாகவுள்ள நடிகர் தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் சாந்தனு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் தளபதி விஜய் மற்றும் அஜித்குமார் ரசிகர்களின் ட்விட்டர் மோதல் குறித்து தன் கருத்தை பதிவிட்டுள்ளார்.
நடிகர் சாந்தனு பாக்யராஜ்

அதில்…

‘இங்க நான் ஒண்ணும் பஞ்சாயத்து பண்ண வரல்ல. அது என் வேலையும் இல்லை.

ஆனால் இருதரப்புக்கும் என்னால் முடிந்த ஒரு அறிவுரை. யாரும் யாரையும் விட்டு கொடுக்க வேண்டாம். தளபதி ரசிகர்கள் ட்ரோல்லை ஆரம்பித்து இருந்தால், தல ரசிகர்களுக்கு எனது வேண்டுகோளாக அதை கண்டு கொள்ளாமல் மறந்துவிடும்படி கேட்டு கொள்கிறேன்.

அதேபோல் ஒருவேளை தல ரசிகர்கள் ஆரம்பித்து இருந்தால், தளபதி ரசிகர்கள் அதனை கண்டுகொள்ளாமல் மறந்துவிடவும். பதிலுக்கு பதில் கூறினால் பிரச்சனை வளர்ந்து கொண்டேதான் போகும்’ என்று கூறியுள்ளார். நடிகர் சாந்தனு பாக்யராஜ்