தளபதி பிறந்தநாளுக்கு போட்டியாக தல ரசிகர்கள் ட்ரெண்டிங்; இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு கார்டு…?

தளபதி பிறந்தநாளுக்கு போட்டியாக தல அஜித் ரசிகர்கள் ட்ரெண்டிங்; இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு கார்டு…?

தளபதி நடிகர் விஜய் இன்று ஜீன் 22ஆம் தேதி தன் 46வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

எனவே கடந்த ஒரு வாரமாக இணையத்தில் தளபதி நடிகர் விஜய் தொடர்பான வீடியோக்கள் படங்கள் உலா வருகின்றன.

பெரும்பாலானவர்களின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களில் தளபதி விஜய் பாடல்கள் நிரம்பி வழிகின்றன.

தளபதி விஜய்க்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் தளபதி விஜய்யை ஒரு பக்கம் வாழ்த்தினாலும் மறு பக்கம் அஜித்துக்கு டிரெண்டிங் செய்து வருகிறார்கள் தல அஜித் ரசிகர்கள்.

#ThalafansDay மற்றும் #NonPareilThalaAjith உள்ளிட்ட ஹேஷ்டேக்கை உருவாக்கி உலகளவில் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.

இன்று அஜித்குமார் படம் தொடர்பாக எதுவும் வெளியாகவில்லை.

அப்படியிருக்கையில் அஜித் ரசிகர்கள் எதையும் டிரெண்ட் செய்ய வேண்டியதில்லை.

ஆனாலும் தளபதி விஜய் ரசிகர்களுக்கு போட்டியாகவே இவ்வாறு செயல்படுகின்றனர்.

இந்த போட்டி பொறாமை குணம் என்று மாறுமோ? என்பதே பலரின் எண்ணமாக உள்ளது.

தளபதி விஜய் தல அஜித்குமார் ஆகிய இருவரும் நண்பர்களாக இருந்தாலும் ரசிகர்களின் போட்டிக்கு.. இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு கார்டு..?

Ajith fans trending clash with Vijay fans on Thalapathy Birthday

error: Content is protected !!