தளபதி நடிகர் விஜய் விநியோகஸ்தருக்கு கைகொடுக்க புதிய ஒப்பந்தம்.

தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி நடிகர் விஜய் விநியோகஸ்தருக்கு கைகொடுக்க புதிய ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி நடிகர் விஜய் – மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் படம் மாஸ்டர். இந்த திரைப்படத்தை இணையதளத்தில் வெளியிட பிரபல ஓடிடி நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், தளபதி நடிகர் விஜய் கேட்டுக் கொண்டதால் திரைப்படத்தை திரையரங்கில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது தளபதி நடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைப்படத்திற்கான திரையரங்கு உரிமையை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் சார்பாக லலித்குமார் கைப்பற்றியிருக்கிறார்.

கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பின் காரணமாக ஊரடங்கு உத்தரவால் மாஸ்டர் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிப்போனதால் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.

இதனை கருத்தில் கொண்டு தளபதி நடிகர் விஜய், அவரது தயாரிப்பில் ஒரு திரைப்படம் நடிக்க ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தளபதி நடிகர் விஜய்யின் இந்த முடிவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

இந்த மாஸ்டர் திரைப்படம் 2020 தீபாவளிக்கு பிரம்மாண்டமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.