Saturday, August 15
Shadow

தளபதி விஜய்யின் திரைப்படம் சில மாற்றங்களுடன் நேரடியாக OTT இனையத்தில் வெளியாக உள்ளது.

தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி நடிகர் விஜய் அவர் நடித்துள்ள திரைப்படம் சில மாற்றங்களுடன் நேரடியாக OTT இனையத்தளத்தில் வெளியாக உள்ளது.

தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகராக இருக்கும் தளபதி நடிகர் விஜய்க்கு கேரளா ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற வெளி மாநிலங்களிலும் அதிகளவில் ரசிகர்களின் பட்டாளம் உள்ளது.

இதற்காக தளபதி நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படங்கள் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட்டு வருகின்றன.

அண்மையில் தளபதி நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படமும் தெலுங்கில் வெளி வந்து வசூலில் சக்கைப்போடு போட்டது.

இந்த நிலையில் தளபதி நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற ‘ஜில்லா’ திரைப்படத்தின்  தெலுங்கு பதிப்பை சில மாற்றங்களுடன் நேரடியாக OTT இனையத்தளத்தில் வெளியிட உள்ளனர்.

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தை 2014-ஆம் ஆண்டே தெலுங்கிலும் வெளியிட திட்டமிட்டு அங்கு நகைச்சுவை கதாபாத்திரத்தில் கலக்கி வரும் தெலுங்கு நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தம் நடித்துள்ள சில காட்சிகள் ஜில்லா திரைப்படத்தில் எடுக்கப்பட்டிருந்தன.

ஜில்லா திரைப்படத்தில்
தமிழில் தெலுங்கு நகைச்சுவை நடிகர் பிரம்மானந்ததின் காட்சிகள் சேர்க்காமல் நீக்கப்பட்டிருந்தது.

சில காரணங்களால் அப்போது ஜில்லா திரைப்படம் தெலுங்கில் வெளியாகவில்லை.

எனவே தற்போது தெலுங்கில் வெளியாவதால் தெலுங்கு நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தம் தளபதி நடிகர் விஜய்யுடன் நடித்த நீக்கப்பட்ட காட்சிகள் மீண்டும் இணைக்கப்பட்டு தெலுங்கு ரசிகர்களுக்காகவே பிரத்யேகமாக OTT இனையத்தளத்தில் வெளியாக உள்ளது.

ஜில்லா திரைப்படத்தை நீசன் இயக்கி இருந்தார்.

இந்த ஜில்லா திரைப்படத்தில் தளபதி நடிகர் விஜயுடன் மலையாள நடிகர் மோகன் லால் முதல் முறையாக இணைந்து நடித்திருந்தார்.

இந்த ஜில்லா திரைப்படத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் சூரி நிவேதா தாமஸ் மற்றும் மஹத் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.