தளபதி விஜய்யை விட மனசில்ல; அவர் இல்லேன்னா நானில்ல..: அட்லி
சென்னையில் தற்போது நடிகர் விஜய்யின் ‘பிகில்’ பட இசை வெளியீட்டு விழா நடைற்று வருகிறது.
இந்த விழாவில் அட்லி பேசிக் கொண்டிருக்கிறார். அவர் பேசுவதாவது…
தெறி மற்றும் மெர்சல் படங்களை விட பிகில் பெஸ்ட்டா இருக்கும். மெர்சல் படத்திற்கு பிறகு நிறைய படங்களை இயக்க வாய்ப்புகள் வந்தன.
ஆனால் எனக்கு விஜய் அண்ணனை விட்டு போக மனசுல்லை.
இந்த படத்துல ஒன்னும் ஒன்னும் பார்த்து செஞ்சுருக்கேன்.
என்னுடைய பேவரைட் ஹீரோ எப்பவும் அவர்தான்.
எல்லா இயக்குனருக்கும் ஒரு ஹீரோ இருப்பாங்க. எனக்கு விஜய் அண்ணா தான்.
‘
என்னுடைய வளர்ச்சிக்கு முக்கிய காரணம் அவர்தான். அவர் இல்லேன்னா நான் ஒன்னுமில்ல..” என்றார் அட்லி.
மேலும் அக்டோபர் 1ஆம் தேதி பிகில் டீசர் ரிலீஸ் என்றும் தெரிவித்தார்.











