பாட்டு. பன்ச் டயலாக். அட்வைஸ். அரசியல்; வேற லெவல் நடிகர் விஜய்
பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்யின் பேச்சு ஹைலைட்டாக அமைந்துவிட்டது எனலாம்.
படத்தில் பணியாற்றிய விவேக், நயன்தாரா முதல் அனைவரையும் பாராட்டி பேசினார்.
வெறித்தனம் என்ற பாடலை பாடி தன் பேச்சை ஆரம்பித்தார்.
அந்த அனல் பறக்கும் பேச்சை இறுதிவரை கொண்டு சென்று ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
அவரின் பேச்சில் உள்ள ஹைலைட்ஸ் இதோ…
வாழ்க்கைல அவங்க மாதிரி இவங்க மாதிரி வரணும்னு ஆசைப்படாதீங்க. அதுக்கு தான் அவங்களே இருக்காங்களே.. நீங்க நீங்களா வாங்க.
விளையாட்டில் மேம்படனும்னா அரசியல்ல புகுந்து விளையாட்டு பண்ணுங்க.. விளையாட்டுல அரசியல் பண்ணாதீங்க. எதனை யாரால் முடிக்க முடியும் என பார்த்து யாரை எங்க உக்கார வெக்கணும்னு திறமை வெச்சு முடிவு பண்ணுங்க.
உலகத்துலயேப் உழைச்சவனை மேடையில் ஏத்தி அழகு பார்க்குற முதலாளி ரசிகன் தான்! வேற லெவல் யா நீங்க,
பெண்கள் ஜெயிக்கற படத்தில வாழ்க்கையில ஜெயிச்ச நயன்தாரா இருக்கறது ரொம்ப சந்தோஷம்
பல லட்ச மரக்கன்று நடும் விவேக் அவர்களுக்கு நன்றி & பாராட்டுகள்
நாம கோல் போடுறத தடுக்க ஒரு கூட்டம் இருக்கும். நம்ம கூட இருக்கறவங்களே கூட சேம் சைட் கோல் போடுவாங்க.
கலர பத்தி பேசுறதில்ல வெற்றி காலர தூக்கிட்டு கெத்தா சொல்றதுல இருக்கு வெற்றி..
உழைத்தவர்களை மேடையில் ஏற்றிப் பார்க்கும் ரசிகர்கள் தான் முதலாளி என தெரிவித்தார்
பேனரால் இறந்த சுபஸ்ரீ குடும்பத்துக்கு என்னோட ஆறுதல்! சுபஸ்ரீ விவகாரத்தில் லாரி டிரைவர் மற்றும் பேனர் அச்சடித்தவர்கள் மீதும் வழக்கு போடுகிறார்கள்.
இதுபோன்ற சமூக பிரச்சனைக்கு ஹாஷ் டாக் போடுங்க. சமூக பிரச்சனைல கவனம் செலுத்துங்க.
பேனர் கட் அவுட்லாம் கிழிச்சப்போ ரசிகர் வருத்தப்பட்ட அளவு நானும் வருத்தப்பட்டேன்.. என் போட்டோவ கிழிங்க, உடைங்க. என் ரசிகன் மேல கை வைக்காதீங்க.
என் ரசிகர்கள் எவ்வளோ ஆசைகளோட கனவோட சிரமத்துள பேனர்லாம் வெக்குறாங்க அதை கிழிச்சா அவங்களுக்கு கோவம் வரது நியாயம் தான்! அதுக்காக அவங்க மேல கை வைக்காதீங்க இது வேண்டுகோள்! கேக்க முடிஞ்சா கேளுங்க.
எதிரியாக இருந்தாலும் மதிக்க வேண்டும். காரில் செல்லும் போது கருணாநிதியை பற்றி தவறாக கூறியவரை இறக்கி விட்டவர் எம்ஜிஆர்…
என அனைத்தையும் கலந்து பேசினார் நடிகர் விஜய்.











