Saturday, December 5
Shadow

தளபதி விஜய் நடிக்க வேண்டிய கதையில் ‘பப்பி’ பட கதாநாயகன் வருண் நடிக்கிறார் ; கௌதம் வாசுதேவ் மேனன் முடிவு

கமல்ஹாசன், அஜித்குமார், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் பணியாற்றினாலும் இன்னும் ரஜினிகாந்த் அண்ட் தளபதி விஜய் உடன் கௌதம் வாசுதேவ் மேனன் பணியாற்றவில்லை.

இவர் இயக்கியுள்ள தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா நவம்பர் 15ல் வெளியாகும் என அறிவித்தார். மேலும் சியான் விக்ரமின் துருவ நட்சத்திரம் படமும் தயாராகி வருகிறது.

ஆனால் விஜய்யுடன் இவர் இணையவிருந்த யோஹன்: அத்தியாயம் ஒன்று படம் பல வருடங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டு அப்படியே நின்று போனது.

கதையில் விஜய் நிறைய மாறுதல் சொன்னதால் படம் கைவிடப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஒரு புதிய படத்தை தொடங்கியுள்ளார் கௌதம் வாசுதேவ் மேனன்.

இந்த படத்தில் பப்பி பட ஹீரோ வருண் கதாநாயகனாக நடிக்கிறார்.

விஜய்க்காக எழுதப்பட்ட யோஹன்: அத்தியாயம் ஒன்று பட கதையை தான் வருண்க்காக கௌதம் வாசுதேவ் மேனன் மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.