இசையமைப்பாளர் நடிகர் விஜய் ஆண்டனியுடன் இணைந்த இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன்.

சென்னை 27 ஜூன் 2021

இசையமைப்பாளர் நடிகர் விஜய் ஆண்டனியுடன் இணைந்த இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன்.

ஜஇசையமைப்பாளர் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி முதன்முறையாக பிரபல இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனுடன் இணைந்துள்ளார்.

ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிப்பில் இயக்குனர் சசி இயக்கத்தில் டிஷ்யூம் என்ற திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

தளபதி விஜய் நடிப்பில் சுக்ரன் திரைப்படத்திற்கு
இசையமைத்து முதல் திரைப்படமாக வெளிவந்தது.

தமிழ் திரைப்பட உலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகிய விஜய் ஆண்டனி தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

இவரது நடிப்பில் வெளியான நான், சலீம், பிச்சைக்காரன், கொலைகாரன் போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

இசையமைப்பாளர் நடிகர் விஜய் ஆண்டனி கைவசம் அக்னி சிறகுகள், காக்கி, தமிழரசன் போன்ற திரைப்படங்கள் உள்ளன.

இதுதவிர மெட்ரோ திரைப்படத்தின் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் ‘கோடியில் ஒருவன்’ திரைப்படத்திலும் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி.

அரசியல் திரில்லர் திரைப்படமாக உருவாகி உள்ள இந்த திரைப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார்.

இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தின் ‘ஸ்லம் ஆந்தம்’ என்கிற பாடல் நாளை வெளியிடப்பட உள்ளது.

இந்தப்பாடலை இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், நடிகர்கள் விஜய் ஆண்டனி, பிரேம்ஜி, இசை அமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா ஆகியோர் முதன்முறையாக இணைந்து பாடியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் டிரம்ஸ் சிவமணியும் இந்த பாடலில் பணியாற்றி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!