தளபதி 65 ஏ ஆர் முருகதாஸ் தளபதி 66 அட்லீ இயக்குவார்கள் என தெரிகிறது
கடந்த 8 வருடங்களில் 10 படங்களில் நடித்துள்ளார் தளபதி நடிகர் விஜய்.
இதில் துப்பாக்கி, கத்தி, சர்க்கார், உள்ளிட்ட மூன்று திரைப்படங்கள் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கியுள்ளார்.
இதைப்போல் தெறி, மெர்சல், பிகில், ஆகிய உள்ளிட்ட மூன்று திரைப்படங்களை அட்லி இயக்கியுள்ளார்.
இப்படியே இந்த இரண்டு இயக்குநர்களுக்கு மாறி மாறி தனது படத்தை இயக்கும் வாய்ப்பு கொடுத்திருக்கிறார் தளபதி நடிகர் விஜய்.
ஜில்லா தலைவா புலி பைரவா படங்களை வேறு இயக்குனர்கள் இயக்கி இருக்கிறார்கள்.
தற்போது உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.
இந்த நிலையில் மீண்டும் முருகதாஸ் அட்லீக்கு தனது படங்களை விஜய் இயக்க கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தளபதி 65 திரைப்படத்தை முருகதாஸ் துப்பாக்கி 2 இயக்குவார் என தெரிகிறது என்றும் தளபதி 66 திரைப்படத்தை அட்லி இயக்குவார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.











