‘தளபதி 65’ படப்பிடிப்பு முதல் வெளியீடு வரை படக்குழுவினர் பக்கா ப்ளான் உடன் களமிறங்கும் இயக்குனர் நெல்சன் திலீப்குமார்.

சென்னை : 15 டிசம்பர் 2020

தளபதி 65 திரைப்படத்திற்கு இயக்குநர் அவர்தான் இயக்குவார் இவர்தான் இயக்குவார் என கூறப்பட்ட நிலையில் தற்போது தளபதி 65 இயக்கப்போகும் இயக்குநர் நெல்சன் திலீப்குமார்தான் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

தளபதி விஜய்யின் 65-வது திரைப்படத்தை இயக்கப் போகும் இயக்குநர் யார் என்பதை திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்து விட்டது.

இந்த இயக்குநர் நெல்சன் திலீப்குமார். 2018-ஆம் வருடம் நயன்தாரா யோகிபாபுவை வைத்து ‘கோலமாவு கோகிலா’ என்னும் காமெடி கலந்த ஒரு வெற்றி திரைப்படத்தைக் கொடுத்தவர்.

அதன் பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டாக்டர்’ என்ற திரைப்படத்தை தேடி வருகிறார்.

அந்த டாக்டர் திரைப்படத்தின் இறுதி கட்ட வேலைகள் தற்போது நடந்து வரும் நேரத்தில் தளபதி விஜய்யின் 65 வது திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்திருக்கிறது.

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க உள்ள ‘தளபதி 65’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் திரைப்படத்தின் வெளியீட்டு குறித்த புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.

தளபதி நடிகர் விஜய்யின் 65-வது திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ளார்.

இந்த திரைப்படத்தை தற்காலிகமாக ‘தளபதி 65’ என பெயர் வைத்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த தளபதி 65 நிரைப்டத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். தற்போது இந்த திரைப்படத்தின் முதற்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வரும் புத்தாண்டன்று முன்னிட்டு இந்த திரைப்படத்தின் தலைப்பை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

அதே போல் ‘தளபதி 65’ திரைப்படத்தின் படப்பிடிப்பை 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்க முடிவு செய்துள்ளனர்.

இந்த தளபதி 65 திரைப்படத்தின் படப்பிடிப்பை மூன்று கட்டமாக நடத்தி முடித்து அடுத்தாண்டு தீபாவளிக்கு திரைப்படத்தை வெளியிட வேண்டும் என்ற பக்கா பிளானுடன் படக்குழுவினர் செயல்பட்டு வருகின்றனர்.

நடிகர் தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாக உள்ளது.

ஒரே வருடத்தில் தளபதியின் இரண்டு திரைப்படங்கள் வெளியாவதால் தளபதி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்

error: Content is protected !!