தளபதி 66’ திரைப்படத்தின் முலம் மீண்டும் இணையும் மெகா ‘மெர்சல்’ தயாரிப்பாளர்.
இயக்குனர் ராமநாராயணன் அவர்களது திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தங்களின் 100-வது படமாக தளபதி நடிகர் விஜய் நடித்த மெர்சல் திரைப்படத்தை தயாரித்தது.
இந்த திரைப்படத்தை இயக்குனர் அட்லி இயக்க ஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மான் இசையமைக்க கடந்த 2017ல் வெளியானது.
இந்த மெர்சல் திரைப்படம் வசூல் சாதனை செய்திருந்தாக கூறப்பட்டது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல… ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய தோல்வி திரைப்படம் எனவும் தகவல்கள் வந்தன.
இந்நிலையில் மெர்சல் திரைப்படத்தின் தயாரிப்பாளர் முரளி ராமசாமியின் அண்மை பேட்டியில்… தளபதி நடிகர் விஜய் நடித்த “மெர்சல் திரைப்படம் தோல்விப் படமல்ல என்பதை நான் மிகத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
நானும் தளபதி நடிகர் விஜயும் சில நாட்களுக்கு முன்பு கூட பேசினோம். தளபதி 65 படத்தை முடித்த பிறகு, அவர் எனக்காக மீண்டும் ஒரு படம் நடித்துக் கொடுப்பதாக உறுதியளித்துள்ளார்.” என தெரிவித்துள்ளார்.
ஆக மீண்டும் மெர்சல் கூட்டணி இணைவது உறுதியாகியுள்ளது.
இதிலும் பிரபல இயக்குனர்கள் நடிகைகள் மெகா கூட்டணி இணையும் என எதிர்பார்க்கலாம்.
தளபதி 65 திரைப்படத்தை எ ஆர் முருகதாஸ் இயக்க சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்க உள்ளதாகவும் இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.











