மாஸ்டர்’ திரைப்படத்தின் இயக்குனருக்கு நோ சொன்ன சூப்பர் ஸ்டார் ஓகே சொன்ன உலக நாயகன்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் உலக நாயகன் கமல்ஹாசனும் இருவரும் இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளனர்.
ஆனால் கிட்டதட்ட 35 வருடங்களாக இவர்கள் இதுவரை இணைந்து நடிக்கவில்லை.
பல இயக்குனர்கள் முயற்சித்தும் இது நடைபெறவில்லை.
ஆனால் மாஸ்டர் திரைப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜிக்கு இந்த வாய்ப்பு அமைந்தது.
உலக நாயகன் கமலஹாசன் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க அந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக கூறப்பட்டது.
மேலும் இதில் ஒரு கெஸ்ட் ரோலில் நடிப்பார் எனவும் அவ்வப்போது சொல்லப்பட்டது.
தற்போது கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அனைத்து மக்களும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.
இதனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் இணையும் திரைப்படத்தின் வேலைகளை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் செய்து வந்துள்ளார்.
கதைகான வேலைகளை முடித்து விட்டு அதை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் சொன்னாராம்.
ஆனால் கமர்ஷியல் விஷயங்கள் குறைவாக உள்ளதால் அந்த கதையை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதையை நிராகரித்து விட்டதாக சொல்லப்படுகிறது.
இதனால் கன்ப்யூஸ் ஆன இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கதையை உலக நாயகன் கமல்ஹாசன் சொல்ல அவரே இந்த கதையில் நடிக்க விருப்பம் தெரிவித்துவிட்டாராம்.
தான் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் மிகப்பெரிய ரசிகன் என்றும் அவரின் விருமாண்டி மற்றும் நம்மவர் ஆகிய படங்களின் கதையை முன்மாதிரியாக வைத்துதான் கைதி மற்றும் மாஸ்டர் படங்களை உருவாக்கியதாக சொல்லியிருந்தார்.
எனவே தற்போது தன் ஆஸ்தான உலக நாயகன் கமல்ஹாசன் இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் மாஸ்டர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்











