தள்ளி வைக்கப்பட்டது தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் அதிகாரி எம்.ஜெய்சந்திரன் அறிவிப்பு.
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக நடிகர் விஷால் இருந்தார்.
இவரது தலைமையிலான நிர்வாகத்தின் கீழ் சங்கம் இருந்தது.
இப்போது தனி அதிகாரியின் நிர்வாகத்தில் செயல்பட்டு வருவது நாம் அறிந்த ஒன்றுதான்.
வருகிற ஜுன் மாதத்திற்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் தேர்தல் அதிகாரியாக முன்னாள் நீதிபதி எம்.ஜெய்சந்திரனை நியமித்தது.
இதைத் தொடர்ந்து தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் வருகிற ஜூன் 21ந் தேதி நடைபெறும் என்று அதற்கான அட்டவணை கடந்த ஏப்ரல் மாதம் 16ந் தேதி வெளியிடப்பட்டது.
இதில், டி.சிவா தலைமையில் ஒரு அணியினரும், முரளி ராமசாமி தலைமையில் ஒரு அணியினரும், தாணு தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிடுவதாக அறிவித்தனர்.
இந்த நிலையில் தேர்தல் தள்ளி வைக்கப்படுவதாக தேர்தல் அதிகாரி எம்.ஜெய்சந்திரனும், தனி அதிகாரி கே.கே.மஞ்சுளாவும் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
தமிழ்நாட்டில் கொரோனோ வைரஸ் நோய் தொற்று பாதிப்பு தாக்குதல் தீவிரம் அடைந்திருப்பதாலும், தேர்தலுக்கு கால அவகாசம் கேட்ட வழக்கு நிலுவையில் இருப்பதாலும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதியில் தேர்தல் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவின்படி மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.











