தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க ( 2020 2022 ) தேர்தல் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தலைமையில் ஒரு அணி போட்டி.
பேரன்புடையீர்
வணக்கம்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் நலன் காக்கும் அணியின் தேர்தல் அலுவலக திறப்பு விழா . (18.03.2020 புதன்கிழமை) சிறப்பாக நடைபெற்றது
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க ( 2020 2022 ) தேர்தல் வெகு விரைவில் நடைபெறவுள்ளது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளாகள் சங்க தேர்தலில் நான்கு அணிகளாக போட்டி இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
வெகு விரைவில் நடைபெற உள்ள தேர்தலில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளாகள் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தலில் இரண்டாவது அணியாக நலன் காக்கும் அணி உருவாக்கப்பட்டுள்ளது
இந்த அணிக்கு தயாரிப்பாளர் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி என்கிற N.ராமசாமி தலைமையிலான நலன் காக்கும் அணி தேர்தல் களத்தில் இறங்குகிறது.
தனது நலன் காக்கும் அணி
வேட்பாளர்களை அறிமுக கூட்டம் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் நலன், வளர்ச்சி, பாதுகாப்பு கருதி, தமிழ் திரைப்பட உலகில் அனுபவம் வாய்ந்த தயாரிப்பாளர்கள் ஒருங்கிணைந்து ஒரு சிறந்த அணியை உருவாக்கி, உள்ளனர்.
வெகு விரைவில் வருகின்ற தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் (2020-22) போட்டியிடுகிறது. அணியின் அங்கத்தினர்களின் விபரங்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.
தலைவர் பதவிக்கு போட்டியிடும்.
திரு முரளி என்கிற N.ராமசாமி
இராம நாராயணன் தலைவர்
( தேனாண்டாள் பிலிம்ஸ் )
துணை தலைவர் பதவிக்கு போட்டியிடும்.
திரு சுபாஷ் சந்திரபோஸ் துணை தலைவர்.
துணை தலைவர் பதவிக்கு போட்டியிடும்.
திரு மைக்கேல் ராயப்பன்
துனண தலைவர்
பொதுசெயலாளர் பதவிக்கு போட்டியிடும்.
திரு ராதாகிருஷ்ணன் பொது செயலாளர்
பொதுசெயலாளர் பதவிக்கு போட்டியிடும்.
K J R ராஜேஷ் பொது செயலாளர்
பொருளாளர் பதவிக்கு போட்டியிடும்.
திரு சந்திர பிரகாஷ் ஜெயின் பொருளாளர்
மற்றும் 21 செயற்குழு
உறுப்பினர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்
அதில் பெரு வாரியான
தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..
S.V.சேகர் உள்ளிட்ட பல பெரிய தயாரிப்பாளர்கள் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்..
இதற்கிடையே தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி நலன் காக்கும் அணியினர், அமைச்சர் கடம்பூர் ராஜூவை அவர்களை நேரில் சந்தித்து பேசி உள்ளனர்.