திரைப்படங்களில் நடிகர் பிரகாஷ்ராஜ் நடிக்க தடை கேட்டு இந்து அமைப்பினர் மனு*

நடிகர் பிரகாஷ்ராஜ் கடந்த மக்களவை தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கி படு தோல்வி அடைந்தார். இருப்பினும் பாஜக மீதான எதிர்ப்பை அவர் குறைத்து கொள்ளவில்லை. இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ராம்லீலா நிகழ்ச்சி குறித்து சர்ச்சையான கருத்து ஒன்றை கூறி இருந்தார். மேலும் உத்தரபிரதேச முதல்வரை கடுமையாக விமர்ச்சிருந்தார். இந்நிலையில் பிரகாஷ்ராஜ் திரைப்படங்களில் நடிக்க வாழ்நாள் தடை விதிக்க கோரி பல்வேறு இந்து அமைப்பினர் திரைப்பட வர்த்தக சபையில் மனு அளித்துள்ளனர்.