நடிகர் சூர்யாவின் இரண்டு திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் நடிகை வாணி போஜன்!
தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான சின்னத்திரை நயன்தாரா என்று புகழப்பட்ட வாணி போஜன், ‘ஓ மை கடவுளே’ திரைப்படம் மூலம் திரைப்பட்த்துறைக்கு வந்தார்.
அந்த திரைப்படத்தில் நடிகை வாணி போஜன் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகள் கிடைத்தன.
நிறைய திரைப்பட வாய்ப்புகளும் வந்தன. தற்போது நடிகர் விக்ரம் பிரபு ஜோடியாக புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
இதன் படப்பிடிப்பை கொரோனா ஊரடங்கு முடிந்ததும் தொடங்க உள்ளனர்.
இதுபோல் நடிகர் சூர்யா தயாரிக்கும் இரண்டு திரைப்படங்களில் நடிக்கவும் தேர்வாகி உள்ளார்.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சத்தில் இந்த படங்கள் தயாராக உள்ளன.
ஏற்கனவே நடிகர் வைபவ் உடன் ‘லாக்கப்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இதில் இயக்குனர் வெங்கட் பிரபு வில்லனாக வருகிறார். இந்த திரைப்படத்தை மே மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.
நடிகர் ஆதவ் கண்ணதாசனுடன் பேய் படம் ஒன்றிலும் நடித்துள்ளார்.
இதுபோல் நடிகர் விதார்த் தயாரித்து நடிக்கும் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இன்னொரு புறம் வெப் தொடர்களிலும் நடிக்கிறார். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவாகும் வெப் தொடரில் நடிகர் ஜெய் ஜோடியாக நடித்து வருகிறார்.
இதன் பட வேலைகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கும் வெப் தொடரில் நடிக்கவும் நடிகை வாணி போஜனிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது.
இந்த தொடரை எ.ஆர். முருகதாசின் துணை இயக்குனர் இயக்க உள்ளாதாக கூறப்படுகிறது.











