கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்களில் மட்டுமே நடிக்க முடிவு. நடிகை நயன்தாராா.

சென்னை 18 மே 2021

கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்களில் மட்டுமே நடிக்க முடிவு. நடிகை நயன்தாரா

தமிழ் தமிழ் திரைப்பட உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நயன்தாரா. ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், சூர்யா, தனுஷ், சிம்பு, விஜய்சேதுபதி உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள இவர், இடையிடையே கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடித்து வருகிறார்.

நடிகை நயன்தாராவை முதன்மைப்படுத்தி வந்த அறம் படம், அவருக்கு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

இதை அடுத்து கோலமாவு கோகிலா, டோரா, இமைக்கா நொடிகள், ஐரா ஆகிய திரைப்படங்களிலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

நடிகை நயன்தாரா, தற்போது ரஜினிகாந்துடன் அண்ணாத்த, விஜய்சேதுபதியுடன் காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படங்களுக்கு பிறகு கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்களில் மட்டுமே நடிக்க முடிவு எடுத்து கதை கேட்டு வருகிறாராம் நடிகை நயன்தாரா.

தற்போது அவர் கைவசம் உள்ள நெற்றிக்கண் படமும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!