தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பற்றி அவதூறு பரப்பியதால் மன்னை சாதிக் கைது

மன்னார்குடியை சேர்ந்தவர் சாதிக் பாஷா.

பேஸ்புக், டிக் டக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் பிரபலமானவர் இவர்.

இதன் காரணமாக சினிமாவில் வாய்ப்பு கிடைக்கப் பெற்றார்.

களவாணி, நட்பே துணை, கோமாளி உள்ளிட்ட படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார்.

சமீபத்தில் அவருடைய பேஸ்புக் பக்கத்தில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை தவறாக சித்தரித்து புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து மன்னார்குடி பாஜக நகரச் செயலாளர் ரகுராமன் கொடுத்த புகாரின் அடிப்படையில் மன்னார்குடி போலீஸ் சாதிக் பாஷாவை கைது செய்துள்ளனர்.

சாதிக் பாஷாவை 15 நாட்கள் திருச்சியிலுள்ள மத்திய சிறையில் அடைக்க மன்னார்குடி கோர்ட் உத்தரவிட்டுள்ளது