சிலம்பரசன் – தனுஷ் – இயக்குனர் மிஷ்கின் கூட்டணியை இணைக்கும் ஐசரி கே கணேஷ்.?

எல்கேஜி, கோமாளி  சீறு உள்ளிட்ட படங்களை வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பாக தயாரித்து வருகிறார் ஐசரி கே கணேஷ்.

இந்நிறுவனம் தற்போது மிஷ்கின் இயக்கத்தில் ஒரு திரைபபடத்தை தயாரிக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

இதில் தனுஷ் மற்றும் சிலம்பரசன்S.T ஆகியோர் நடிக்கவுள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளது. இவர்கள் இணைவது இதுவே முதன்முறையாகும்.

இந்தக்கதையை தான் நடிகர் சங்க கட்டிடம் கட்ட உதவி செய்வதற்காக நடிகர் விஷால் மற்றும் நடிகர் கார்த்தி இருவரும் தேர்வு செய்து வைத்திருந்தனர்.

அந்த படத்திற்கு வெள்ள ராஜா கருப்பு ராஜா என்று பெயரிட்டு இருந்தனர்.

பிரபு தேவா இத்திரைப்படத்தினை இயக்குவதாக இருந்தார்.

ஆனால் சில காரணங்களால் இத்திரைப்படம் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!