தேவி 2 – திரை விமர்சனம்

நடிப்பு – பிரபுதேவா, தமன்னா, கோவை சரளா, நந்திதா ஸ்வேதா மற்றும் பலர்….

தயாரிப்பு – ஜி.வி.பிலிம்ஸ், டிரைடென்ட் ஆர்ட்ஸ்

இயக்கம் – விஜய்

இசை – சாம் சிஎஸ்

வெளியான தேதி – 31 மே 2019

ரேட்டிங் – 2/5

எது எப்படியிருந்தாலும், முதல் பாகத்தைப் போன்று தான் இப்படமும் இருக்குமா? இல்லை அதனை விட சூப்பரா இருக்குமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

தேவி படத்தின் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக
க்ளைமாக்சில் இருந்து ஆரம்பமாகிறது தேவி 2.
படம் ஆரம்பிக்கிறது. ரூபி பேயிடம் போட்ட ஒப்பந்தம் காரணமாக முந்தைய பாகத்தில் குடியிருக்கும் மும்பை வீட்டில் ரூபியின் அட்டூழியம் மீண்டும் ஆரம்பமாகிவிடுமோ என்ற அச்சம் பிரபுதேவாவை ஆட்டுவிக்கிறது.
இரண்டு வருடங்களுக்கு மேலாக வீட்டிற்குள்ளேயே தமன்னாவை வைத்திருக்கிறார் பிரபுதேவா. மீண்டும் பேய் தொல்லை இல்லாமல்

இதனால் தனது குழந்தையை மாமனார், மாமியாருடன் ஊருக்கு அனுப்பி வைத்து, ஒரு ஜோசியக்காரரின் அறிவுரையின்
படி, மொரிசியஸ் நாட்டுக்கு டிரான்ஸ்பர் வாங்கிக்கொண்டு, தமன்னாவுடன் அழைத்து சென்று வேலை பார்த்து வருகிறார் பிரபுதேவா.

அங்கு ரூபி மீண்டும் தமன்னா உடம்பில் இருக்கிறதா என்று சில சோதனைகளை கதாநாயகன் பிரபுதேவா செய்கிறார். ஆனால், ஏதும் இல்லாததால் மகிழ்ச்சியாக வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிரபுதேவாவை இரண்டு பேய் பிடிக்கிறது. இதையறிந்த தமன்னா, பிரபுதேவாவை எப்படி காப்பாற்றினார்? பேயின் நோக்கம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தின் நாயகனாக நடித்திருக்கும் பிரபுதேவா, தனக்கே உரிய பாணியில் நடிப்பு, காமெடி, நடனம் என மிகவும் அசத்தி இருக்கிறார். குறிப்பாக, பேய் தன்னுள் புகுந்தவுடன், அதற்கேற்ப அவர் காட்டும் உடல் அசைவுகள் அசத்தல்.

நாயகியாக வரும் தமன்னா, மாறுபட்ட நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். குறிப்பாக பாடல் காட்சிகளில் ரசிகர்களை சீட்டிலேயே கட்டி வைத்திருக்கிறார். அவருடைய நடிப்புக்கு தீனி போடும் படமாக அமைந்திருக்கிறது. அதுபோல், மற்ற கதாநாயகிகளாக வரும் நந்திதா சுவேதா, டிம்பிள் ஹயாதி ஆகியோரும் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். கோவை சரளா மற்றும் ஆர்.ஜே.பாலாஜி இருவரும் ஆங்காங்கே ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார்கள். தேவி படத்தின் வெற்றி கொடுத்த உற்சாகத்தில், 2வது பாகத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் விஜய். ஆனால், முதல் பாகம் அளவிற்கு இரண்டாம் பாகம் வெற்றி பெறுமா என்பது சந்தேகம் தான். படத்தை ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை காமெடி படமாகவே எடுத்திருக்கிறார். ஆனால், பார்க்கிற நமக்குத்தான் ஏனோ சிரிப்பு வரவில்லை. கதாபாத்திரங்களை சிறப்பாக கையாளத் தெரிந்த விஜய், திரைக்கதையில் கவனம் செலுத்த மறந்திருக்கிறார். 

அயனன்கா போஸின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. சாம் சி.எஸ்.-யின் இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. பின்னணி இசையிலும் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார்.

மொத்தத்தில் ‘தேவி 2’ படத்தில் பேய் என்றால் பயம் வரும் ஆனால் இந்த படத்தில் பயமே இல்லை