தேள் திரை விமர்சனம் ரேட்டிங் –2.25 /5

நடிகர் நடிகைகள் – பிரபுதேவா, சம்யுக்தா ஹெக்டே, ஈஸ்வரி ராவ், யோகிபாபு, சத்ரு, பரணி, மாரிமுத்து, இமான் அண்ணாச்சி, சூப்பர் ஹிட் சுப்பிரமணி, மற்றும் பலர்.
இயக்கம் – நடன இயக்குனர் ஹரிகுமார்.
ஒளிப்பதிவு – விக்னேஷ் வாசு.
படத்தொகுப்பு – பிரவீன் கே.எல்.
இசை – சி.சத்யா.
தயாரிப்பு – ஸ்டுடியோ கிரீன்.
ரேட்டிங் –2.25 /5
கொரியன் திரைப்படத்தில் இருந்து எடுக்கப்பட்ட கதைக்களம்தான் இந்த ‘தேள்’ திரைப்படம்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு 2012 ஆம் ஆண்டு இயக்குனர் கிம் கி-டுக் இயக்கத்தில் லீ ஜங்-ஜின்
ஜோ மின்-சு நடிப்பில் வெளி வந்த ‘Pieta” என்ற திரைப் படத்தின் அதிகாரப்பூர்வத் தழுவல் திரைப்படம் என படக்குழுவினரை அறிவித்து உள்ளனர்.
கொரியன் மொழியிலிருந்து இறக்குமதி செய்ததாலோ என்னவோ தாய் பாசத்திலும் கதையில் யூகிக்க முடியாத ஒரு வித்தியாசம் இருக்கிறது.
அன்பைக் கொடுத்து அதைத் திருப்பி எடுத்தால் அதனுடைய வலி எப்படியிருக்கும் என்பதை தாய் பாசத்துடன் கொஞ்சம் அழுத்தமாய் சொல்லியிருக்கிறார் நடன இயக்குனர் நடிகர் ஹரிகுமார்.
தமிழ் திரைப்பட உலகில் தாய் செண்டிமெண்ட் கதைகள் எவ்வளவோ வந்திருக்கிறது.
சென்னையில் உள்ள கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி பூ மற்றும் பழங்கள், வியாபாரம் செய்யும் கடைக்காரர்கள் வியாபாரத்திற்காக வட்டிக்கு பணம் வாங்கி, அதை சரியாக செலுத்தாதவர்களை அடித்து உதைத்து பணம் திரும்பி வாங்கும் அடியாள் வேலையை பார்க்கிறார் அனாதையான கதாநாயகன் பிரபுதேவா.
ஒரு நாள் அனாதையான கதாநாயகன் பிரபுதேவாவை சந்திக்கும் ஈஸ்வரி ராவ், திடீரென நான்தான் உனது தாய் என் கூறுகிறார்.
தாய் என கூறிய வரும் ஈஸ்வரி ராவை கோபத்தில் அடித்து உதைத்து விரட்டி அனுப்பும் கதாநாயகன் பிரபுதேவா.
ஒரு கட்டத்தில் தாய் மீது அதிகமான பாசம் ஏற்பட்டு அவரை சேர்த்துக் கொள்கிறார்.
ஒரு கட்டத்தில் தாய்ப் பாசம் என்றால் என்ன என்பதை உணர்கிறார்.
அம்மாவுடன் பாசத்தைப் பகிர்ந்து வாழ்ந்து வரும் நிலையில், திடீரென ஒரு நாள் அவரது அம்மாவை மர்ம நபர்கள் யாரோ கடத்தி விடுகிறார்கள்.
தாயை தேட ஆரம்பிக்கும் கதாநாயகன் பிரபுதேவா, இறுதியில் தாய் ஈஸ்வரி ராவை கடத்தியவர்கள் யார்? எதற்காக கடத்தினார்கள்?
கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதுதான் இந்த தேள் திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த தேள் திரைப்படத்தில் நடன இயக்குனர் இயக்குனர் நடிகர் பிரபுதேவா கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
கதாநாயகன் பிரபுதேவா, அடியாள் தோற்றத்திற்கு மிகவும் கச்சிதமாக பொருந்திருக்கிறார்.
அந்த அளவிற்கு பல குடும்பத்தவர்களை அடியோ, அடியென அடித்து பணத்தை வசூலிப்பவர்.
அவரது மனதில் தாய் பாசம் வந்த பின் அவர் எப்படி மாறுகிறார் என்பது படத்தில் மிக உணர்வுபூர்வமாக நடித்திருக்கிறார்..
எந்த அளவிற்கு அடிதடியில் ஆக்ரோஷமாக நடித்துள்ளாரோ அதே அளவிற்கு பாசமாகவும் நடித்துள்ளார் கதாநாயகன் பிரபுதேவா.
ஆர்ப்பாட்டம் இல்லாத இவருடைய நடிப்பு ரசிக்க வைத்திருக்கிறது.
அடியாளாகவும், பாசக்காரனாகவும் நடித்து மனதில் பதிகிறார் கதாநாயகன் பிரபுதேவா.
கரடு, முரடான அடியாள் தோற்றத்தில் கதாநாயகன் பிரபுதேவா அப்படியே பொருந்திப் போகிறார்.
தாய் என்று வந்து நின்றவரை கூட கோபத்தில் அடித்து உதைக்கும் அளவிற்கு வெறி பிடித்த ஒரு மனிதராக நடிப்பு அருமை.
திரைப்படத்தில் கதாநாயகியாக சம்யுக்தா ஹெக்டே. பெயருக்குத்தான் கதாநாயகியாக படத்தில் வந்து சென்றிருக்கிறார்.
பெரிதாக அவருக்கு வேலை இல்லை.
கதாநாயகன் பிரபுதேவாவும் திரைப்படத்தில் ஒரே ஒரு காட்சியில்தான் சந்தித்துக் கொள்கிறார்கள் என்று நினைத்தால்.
ஆனால் அடிக்கடி சந்தித்துக் கொண்டவர்கள் என்பதை கடைசியில் ஒரு கட்டில் காட்சியில் காட்டி அடிக்கடி சந்தித்தார்கள் என்று உணர்த்துகிறார்கள்.
கதாநாயகியுடன் எப்போதும் சுற்றிக் கொண்டிருப்பவராக யோகி பாபு.
யோகி பாபு ஒரு இடத்திலும் ரசிகர்களை சிரிக்க வைக்கவில்லை என்பதுதான் சோகம்.
தாய் கதாபாத்திரத்தில் ஈஸ்வரி ராவ்.
பாசம் காண்பித்து கதைக்கு வலு சேர்த்திருக்கிறார் நடிகை ஈஸ்வரி ராவ்.
இவருடைய நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.
எப்படிப்பட்ட மனிதனையும் தாய்ப் பாசம் மாற்றிவிடும் என்பதற்கு இவரது கதாபாத்திரம் ஒரு உதாரணம்.
நடன இயக்குனர், நடிகர் என வலம் வந்த ஹரிகுமார் முதல் முறையாக இயக்குனராகி அறிமுகம் ஆகியிருக்கும் திரைப்படம்தான் தேள்
தாய் சென்டிமென்ட்டை உணர்வு பூர்வமாய் இந்த தேள் திரைப்படம் இயக்கியதில் இயக்குனராய் பாஸ் ஆகிவிட்டார்.
தாய், மகன் பாசத்தை மையமாக வைத்து திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஹரிகுமார்.
திரைப்படத்திற்கு பாசம் மட்டுமே போதும் என்று நினைத்துவிட்டதால், அதிகமாக ரசிகர்களை கவரவில்லை.
ஒளிப்பதிவாளர் விக்னேஷ் வாசுவுக்கு நிறைய வேலை மிகவும் நன்றாகவே சமாளித்திருக்கிறார்.
விக்னேஷ் வாசுவின் ஒளிப்பதிவு திரைப்படத்திற்கு பலம். கதைக்களத்தை உணர்ந்து வேலை செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் விக்னேஷ் வாசு.
இசையமைப்பாளர் சி.சத்யாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்.
குறிப்பாக தாய்ப்பாசப் பாடல் சிறப்பு. பின்னணி இசையில் கவனிக்க வைத்திருக்கிறார்.
மொத்தத்தில் கோயம்பேடு மார்க்கெட்டிலேயே முழு திரைப்படத்தையும் எடுத்திருக்கிறார்கள்.
மார்க்கெட்டின் பல இடங்கள், பக்கத்துத் தெருக்கள் கதாநாயகன் பிரபுதேவா வீடு என ஒரு செட் இப்படி குறுகிய இடங்களிலேயே திரைப்படம் முடிந்துவிடுகிறது.
மொத்தத்தில் ‘தேள்’ திரைப்படத்தில் விஷம் இல்லாத தேள்லாக உள்ளது.











